ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலையானது மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது. கோடைகாலம் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்காத நிலையில் கூட வெயிலின் தாக்கம் அமீரகத்தில் மிகவும் உயர்ந்துள்ளது. வெப்பநிலையானது 50°C யை நெருங்கியிருந்த வேளையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வருடத்தின் மிக வெப்பமான நாளாக நேற்று பதிவாகியுள்ளது. குறிப்பாக, அபுதாபியின் அல் ஷவாமேக்கில் வெப்பநிலை 50.4°C வரை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் இன்னும் முடியவில்லை என்றாலும், வெப்பம் இப்போதே முழு வீச்சில் வந்துவிட்டது, இது கோடைக்காலத்தின் ஆரம்ப மற்றும் தீவிரமான தொடக்கத்தை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்றைய வானிலை நிலவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
மே 24 சனிக்கிழமைக்கான முன்னறிவிப்பு
- தெளிவானது முதல் ஓரளவு மேகமூட்டமான வானிலையை எதிர்பார்க்கலாம்.
- தென்கிழக்கில் இருந்து வடமேற்கு நோக்கி மணிக்கு 30 கிமீ வேகத்தில் காற்று வீசும்
- தொடர்ந்து அதிகமான வெப்பநிலை நீடிக்கும்
- அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் இரண்டிலும் லேசான கடல் நிலைமைகள்
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆலோசனை
நாடு முழுவதும் அதிக வெப்பம் நிலவி வருவதால், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். அத்துடன் வெயில் காலத்தில் எப்படி சமாளிப்பது என்பது பற்றிய தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கான சிறந்த குறிப்புகள்
- நீரேற்றத்துடன் (hydration) இருங்கள்: இளநீர் போன்ற ஏராளமான தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட் நிறைந்த திரவங்களைக் குடிக்கவும்.
- சூரிய பாதுகாப்பைப் பயன்படுத்தவும்: SPF 30+ சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும், சன்கிளாஸ்களை அணியவும், அகலமான விளிம்பு கொண்ட தொப்பிகளைப் பயன்படுத்தவும்.
- லேசான, தளர்வான ஆடைகளைத் தேர்வு செய்யவும்.
- உச்ச சூரிய ஒளி நேரத்தைத் தவிர்க்கவும்: மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்
- கார் பாதுகாப்பு எச்சரிக்கை: நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகள், செல்லப்பிராணிகள் அல்லது எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். ஜன்னல்கள் சிறிது திறந்திருந்தாலும், வாகனத்தின் உட்புற வெப்பநிலை சில நிமிடங்களிலேயே ஆபத்தான முறையில் உயரக்கூடும்.
இதனால் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவும், கடுமையான வெப்பத்தின் போது குளிர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel