துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), நகரின் 622 இடங்களில் உள்ள 893 குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் இப்போது முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இவை கோடை மாதங்களில் பயணிகளுக்கு குளிர்ச்சியை வழங்கும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது. இந்த பேருந்து நிறுத்தங்கள் நியமிக்கப்பட்ட சக்கர நாற்காலி இடங்கள் மற்றும் பேருந்து இயக்க நெட்வொர்க்கை விளக்கும் திசை அடையாளங்கள் (sign board) என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
RTA இன் கூற்றுப்படி, இவை சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவமைப்புகளையும் கொண்டுள்ளன. அதே நேரத்தில் துபாயின் நகர்ப்புற நிலைத்தன்மை இலக்குகளுக்கு பங்களிக்கின்றன. கூடுதலாக, பேருந்து வருகை மற்றும் புறப்படும் நேரங்கள் குறித்த நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்கும் டிஜிட்டல் காட்சித் திரைகள் இந்த நிறுத்தங்களில் அடங்கும்.
மேலும், அவை தொடர்ச்சியான சுகாதார மற்றும் சுத்திகரிப்பு முயற்சிகள் மூலம் பராமரிக்கப்படுகின்றன. இதனால் உயர் தரமான சுகாதாரம் மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்கின்றன என்றும் RTA இன் கட்டிடங்கள் மற்றும் வசதிகள் இயக்குனர் ஷைகா அஹ்மத் அல்ஷேக் தெரிவித்துள்ளார். “இந்த நிறுத்தங்கள் நகரத்தின் பொது போக்குவரத்து உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாக மட்டுமல்லாமல், விளம்பர இடத்தையும் வழங்குகின்றன மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கின்றன” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும், RTA துபாய் செயலியில் உள்ள மதினாட்டி (Madinati) சேவை மூலம் இந்த நிறுத்தங்கள் பற்றிய கருத்துகள் அல்லது பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு RTA பொதுமக்களை ஊக்குவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel