ஈத் அல் அதா விடுமுறையின் போது அதிகமான மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) அதன் போக்குவரத்து சேவைகளை அதிகரித்து வருகிறது. பண்டிகை நாட்களில் அதிகரிக்கும் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்காக, SRTA வெவ்வேறு வழித்தடங்களில் 180 பேருந்துகளை இயக்கவுள்ளது, அதன்படி நான்கு நாள் விடுமுறை காலத்தில் சுமார் 5,600 பயணங்களை மேற்கொள்ள இலக்கு வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த காலத்தில், வழக்கமான 45 நிமிடங்களுக்கு பதிலாக ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் பேருந்துகள் வரும் என்றும், இது காத்திருப்பு நேரத்தைக் குறைக்க உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. SRTA வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பரபரப்பான பேருந்து நிலையங்களில், குறிப்பாக ஜூபைல் பஸ் நிலையத்தில் அதிகாலை முதல் இரவு வரை கூடுதல் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகரில் 543 நிறுத்தங்களை உள்ளடக்கிய 12 வழித்தடங்களில் 104 பேருந்துகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் சுமார் 1,144 பயணங்களை இயக்குவதாக SRTA தெரிவித்துள்ளது.
சிறப்பு படகு சேவை
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்துடன் (RTA) இணைந்து சிறப்பு கடல் போக்குவரத்து சேவையையும் SRTA அறிவித்துள்ளது. அதன்படி, விடுமுறை நாட்களில் ஷார்ஜாவில் உள்ள அக்குவாரியம் ஸ்டேஷன் மற்றும் துபாயில் உள்ள அல் குபைபா நிலையம் இடையே தினமும் நான்கு படகுப் பயணங்கள் இருக்கும். இது ஈத் விடுமுறை நாட்களில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மென்மையான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel