நிலையான வேலைகள் மற்றும் வரி இல்லாத சம்பளம் காரணமாக குவைத் பல ஆண்டுகளாக வெளிநாட்டினருக்கு பிரபலமான இடமாக இருந்து வருகிறது. ஆனால் புதிய விதிகள் இப்போது வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் நாட்டில் வாழ்வதையும், குடியேறுவதையும் மிகவும் சவாலானதாக ஆக்குகின்றன.
தனியார் துறை ஊழியர்களுக்கான புதிய exit permit விதி
ஜூலை 1 முதல், தனியார் துறையில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் (பிரிவு 18 வசிப்பிடத்தைக் கொண்டவர்கள்) குவைத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தங்கள் முதலாளியிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இதில் விடுமுறைகள் அல்லது நிரந்தர பயணம் ஆகிய இரண்டும் அடங்கும். இதற்கு நாட்டை விட்டு வெளியேற, நீங்கள் சஹேல் (Sahel) செயலி அல்லது ஆஷால் மேன்பவர் போர்டல் (Ashal Manpower Portal) மூலம் ஆன்லைனில் exit permit-ஐக் கோர வேண்டும்.
உங்கள் முதலாளி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும். இந்த ஒப்புதல் இல்லாமல், நீங்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டீர்கள். உங்கள் முதலாளி சரியான காரணமின்றி உங்கள் கோரிக்கையை தாமதப்படுத்தினால் அல்லது மறுத்தால், நீங்கள் மனிதவள பொது ஆணையத்திடம் புகார் அளிக்கலாம்.
இந்தப் புதிய விதியின் நோக்கம்:
- சட்டவிரோதமாக வெளியேறுவதைத் தடுப்பது
- தொழிலாளர்கள் கடன்களை அடைத்து ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதை உறுதி செய்வது
- தொழிலாளர் நடத்தையின் மீது சிறந்த கட்டுப்பாட்டை வழங்குவது
- விசா மோசடி மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது
exit permit எவ்வாறு செயல்படுகிறது?
உங்கள் சிவில் ஐடி மற்றும் பயண விவரங்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, கோரிக்கை தானாகவே உங்கள் முதலாளிக்கு அனுப்பப்படும். முதலாளியால் அங்கீகரிக்கப்பட்டால், அனுமதி உடனடியாக வழங்கப்படும். நியாயமற்ற முறையில் மறுக்கப்பட்டால், நீங்கள் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.
கடுமையான குடும்ப விசா விதிகள்
குவைத் குடும்ப விசா கொள்கைகளிலும் மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஸ்பான்சர் செய்ய விரும்பும் வெளிநாட்டினர் இப்போது மாதத்திற்கு குறைந்தபட்சம் 800 குவைத் தினார் சம்பாதிக்க வேண்டும். இந்த சம்பள விதி ஜனவரி 2024 இல் அமலுக்கு வந்தது. பல்கலைக்கழக பட்டத்திற்கான முந்தைய தேவை நீக்கப்பட்டாலும், உங்கள் வேலை தலைப்பு (job title) உங்கள் உண்மையான தொழிலுடன் பொருந்த வேண்டும்.
வேலை மாற்றம் அல்லது சம்பளக் குறைப்பு காரணமாக உங்கள் வருமானம் 800 குவைத் தினாருக்குக் கீழே குறைந்தால், ஒரு மாதத்திற்குள் நீங்கள் சிக்கலைச் சரிசெய்ய வேண்டும் அல்லது உங்களைச் சார்ந்திருப்பவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டியிருக்கும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அல்லது குவைத்தில் பிறந்தவர்களுக்கு சில விதிவிலக்குகள் சாத்தியமாகும், ஆனால் இவை ஒவ்வொரு விஷயத்திலும் தனித்தனியாக தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிப்படை தேவைகள்
நீங்கள் குவைத்தில் பணிபுரிந்தாலும் அல்லது அங்கு செல்ல திட்டமிட்டிருந்தாலும், இவை முக்கியம்:
- எந்தவொரு பயணத்திற்கும் முன் முதலாளியின் ஒப்புதலைப் பெறுங்கள்
- உங்கள் சம்பளம் குடும்ப ஸ்பான்சர்ஷிப் தேவையைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யவும்
- அனைத்து விசா மற்றும் permit செயல்முறைகளுக்கும் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன்களை (சஹேல் அல்லது ஆஷல்) பயன்படுத்தவும்
இந்த மாற்றங்கள் விதிமுறைகளை கடுமையாக்குவதையும் நாட்டின் தொழிலாளர் அமைப்பின் மீதான கட்டுப்பாட்டை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel