ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) சமூக ஊடகங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய வலைத்தளங்களில் போலி வேலை வாய்ப்புகள் பகிரப்படுவது குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த மோசடிகள் பெரும்பாலும் தனியார் துறை வேலைகளைத் தேடும் நபர்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, மோசடி செய்பவர்கள் உண்மையான ஆட்சேர்ப்பு நிறுவனங்களிலிருந்து செயல்படுபவர்கள் போல் நடித்து, வேலை தேடுபவர்களிடம் வேலை விண்ணப்பங்களை செயல்படுத்த பணம் செலுத்தச் சொல்கிறார்கள். பலர் தங்கள் பணத்தை இழந்த பிறகும், வேலை இல்லாமல் போன பிறகும் மட்டுமே வேலை போலியானது என்பதைக் கண்டுபிடிக்கின்றார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வேலை தேடுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டெம்ப்ளேட்டைப் (template) பயன்படுத்தும் வேலை வாய்ப்புகளை மட்டுமே நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று MoHRE கூறுகிறது. உண்மையான வேலை வாய்ப்புகளில் பார்கோடு (சீரியல் எண்) உள்ளது, பின்வருவனவற்றின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வேலை சலுகைகளைச் சரிபார்க்கலாம்:
- MoHRE இன் வலைத்தளம்
- மொபைல் அப்ளிகேஷன்
- அழைப்பு மையம்: 600590000
வேலை வாய்ப்புக்கான முக்கிய விவரங்கள்:
ஆஃபர் லெட்டரில் பின்வரும் தெளிவான வேலைவாய்ப்பு விவரங்களைச் சேர்ப்பதன் முக்கியத்துவத்தையும் MoHRE வலியுறுத்தியது. மேலும், வேலை வாய்ப்பும் உண்மையான பணி ஒப்பந்தமும் சரியாக பொருந்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேலை ஒப்பந்த வகை-contract type (முழுநேரம், பகுதிநேரம் போன்றவை)
- சம்பளம் (மாதாந்திர, தினசரி அல்லது கமிஷன் அடிப்படையிலானது)
- வாராந்திர விடுமுறை நாட்கள்
- அறிவிப்பு காலம் (notice period)
- இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட ஏதேனும் சிறப்பு நிபந்தனைகள்
செல்லுபடியாகும் வேலை வாய்ப்புக்கு தேவையான ஆவணங்கள்:
- பாஸ்போர்ட் (6 மாதங்களுக்கு மேல் செல்லுபடியாக வேண்டும்)
- வணிக உரிமையாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபரின் இ-சைன் கார்டு (e-signature card)
- நிறுவனத்தின் MoHRE பதிவு எண்ணைக் காட்டும் கையொப்ப அட்டை
- சம்பளம் மற்றும் ஒப்பந்த விவரங்கள்
ஒப்பந்த வகை (contract)
- முந்தைய பணி அனுமதிப்பத்திரத்தின் (work permit) ரத்துச் சான்று (UAE-க்குள் வேலைகளை மாற்றினால்)
- UAE-க்கு வெளியே உள்ளவர்களுக்கு: பணி அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு முன் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்டங்கள்:
UAE சட்டத்தின் கீழ், அனைத்து வேலை சலுகைகளும் ஒப்பந்தங்களும் MoHRE-யின் நிலையான வடிவங்களைப் பின்பற்ற வேண்டும். பணியமர்த்துவதற்கு முன் முதலாளிகள் செல்லுபடியாகும் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி இல்லாமல் ஒருவரை பணியமர்த்துவது சட்டவிரோதமானது, மேலும் எந்தவொரு மீறல்களுக்கும் முதலாளியே முழுப் பொறுப்பாவார். தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே தகராறுகள் ஏற்பட்டால், MoHRE தலையிடும். பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், வழக்கு நீதிமன்றத்திற்குச் செல்லும்.
விசா மோசடி எச்சரிக்கை:
UAE-யின் அதிகாரப்பூர்வ அரசாங்க போர்டல் போலி வேலை சலுகைகள் மற்றும் நுழைவு விசாக்கள் குறித்தும் எச்சரித்துள்ளது. முக்கிய குறிப்புகள்:
- முதலாளிகள் அல்லது நிறுவனங்கள் டூரிஸ்ட் அல்லது விசிட் விசா அல்லாமல், பணி நுழைவு அனுமதியை (work entry permit) வழங்க வேண்டும்
- சுற்றுலா அல்லது விசிட் விசாவில் அமீரகத்த்திற்கு வந்து பணிபுரிவது சட்டவிரோதமானது
- அனைத்து ஆட்சேர்ப்பு செலவுகளையும் வேலை தேடுபவர் இல்லாமல், முதலாளியே செலுத்த வேண்டும்
- தேசிய பொருளாதார பதிவேட்டில் ( National Economic Register) உள்ள எந்தவொரு நிறுவனத்தின் சட்டப்பூர்வ நிலையையும் நீங்கள் சரிபார்க்கலாம்
நுழைவு அனுமதிகளை சரிபார்க்க:
- துபாய் பெர்மிட்: GDRFA வலைத்தளத்தைப் பார்வையிடவும்
- பிற எமிரேட்ஸ்: அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான கூட்டாட்சி ஆணையத்தின் eChannels தளத்தைப் பயன்படுத்தவும்
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel