ADVERTISEMENT

சட்டவிரோதமான பார்ட்டிஷன் ரூமை குறிவைத்த துபாய்.!! கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள்!!

Published: 23 Jun 2025, 7:20 PM |
Updated: 23 Jun 2025, 7:35 PM |
Posted By: Menaka

அமீரகத்தை பொறுத்தவரை வீடு அல்லது அபார்ட்மெண்ட் ரூமில் வசிக்கும் நபர்கள் தங்களது அறைகளை மற்ற நபர்களுடன் பகிர்ந்து பலர் ஒரே அறையில் தங்கக்கூடிய ஒரு பொதுவான பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. வருமானம் குறைவு அல்லது அதிகபட்ச வாடகைத் இதற்கு காரணமாகும். எனவே வெளிநாடுகளில் இருந்து அமீரகம் வரும் நபர்கள் இது போன்ற பகிரப்பட்ட அறைகளிலேயே தங்கி தங்களது வேலைய பார்த்துக்கொண்டு வருகின்றனர். ஆனால் எவ்வாறு தங்குவது சட்ட விரோதமானது என்றும் ஆபத்தானது என்றும் அவ்வப்போது அதிகாரிகள் எச்சரிக்கை வெளியிட்டும் கால ஆய்வுகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் துபாயில் பாதுகாப்பு மற்றும் கட்டிட விதிமுறைகளை மீறுவதை காரணம் காட்டி, தங்குமிடங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு பொதுவான முறையாக, குடியிருப்பு கட்டிடங்களில் பிரிக்கப்பட்ட அறைகளைப் (partitioned room) பயன்படுத்துவதை நிறுத்த துபாய் அதிகாரிகள் ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தி ஊடகங்களில் வெளியான அறிக்கையில், துபாய் முனிசிபாலிட்டி, அல் ரிக்கா, அல் முரக்காபத், அல் பர்ஷா, அல் சத்வா மற்றும் அல் ரஃபா உள்ளிட்ட பல அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் கள ஆய்வுகளைத் தொடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரம் துபாய் நிலத் துறை (Dubai Land Department) மற்றும் துபாய் சிவில் பாதுகாப்புடன் (General Directorate of Civil Defense) ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

கட்டிட உரிமையாளர்களுக்கு ஏற்கனவே விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கீகரிக்கப்படாத மாற்றங்களின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அத்தகைய இணக்கமற்ற கட்டமைப்புகள் அகற்றப்படுவதை உறுதி செய்வதும் இதன் நோக்கம் என்றும் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. மலிவு விலையில் வீடு தேடும் குறைந்த வருமான குடியிருப்பாளர்களால் partition என்று சொல்லக்கூடிய பிரிக்கப்பட்ட அறைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இவை பொதுவாக சமூக ஊடகங்களில் மாதத்திற்கு 600 திர்ஹம் வரை குறைந்த விலையில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

இருப்பினும், இந்த தற்காலிக அமைப்புகள் அவசரகால வெளியேற்றங்களின் போது பாதிப்பையும், தீ அபாயங்களை அதிகரிக்கலாம் மற்றும் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன் குடியிருப்புப் பிரிவுகளில் ஏற்படும் எந்தவொரு கட்டமைப்பு மாற்றங்களுக்கும் அதிகாரப்பூர்வ ஒப்புதல்கள் தேவை என்றும், அவை பாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் முனிசிபாலிட்டி வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை சட்டவிரோதமாக தங்குவதற்கு எதிரான நடவடிக்கைகள் புதிதல்ல. 2000களின் முற்பகுதியில் இருந்து இதேபோன்ற முயற்சிகள் பிற எமிரேட்களிலும் நடந்துள்ளன, குறிப்பாக பகிரப்பட்ட வில்லாக்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பார்ட்டிஷன் ரூம்களை குறிவைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் துபாய் முனிசிபாலிட்டியின் தற்போதைய பிரச்சாரம், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்தல், கட்டிடங்களை முறையாகப் பராமரித்தல் மற்றும் நகரத்தில் ஒழுங்குபடுத்தப்படாத வீட்டு நடைமுறைகளைக் குறைத்தல் ஆகியவற்றின் தொடர்ச்சியான இயக்கத்தின் ஒரு பகுதியாகும் என்றும்  தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel