ADVERTISEMENT

புதிய சவாரிகளுடன் பிரம்மாண்டமாக நாளை திறக்கப்படும் யாஸ் வாட்டர்வேர்ல்ட் விரிவாக்கம்..!!

Published: 30 Jun 2025, 6:57 PM |
Updated: 30 Jun 2025, 6:57 PM |
Posted By: Menaka

அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் அமைந்துள்ள பிரபலமான தீம் பார்க்கான யாஸ் வாட்டர்வேர்ல்ட் அதன் புதிய விரிவாக்கத்தை வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி பொதுமக்களுக்கு வெளியிட உள்ளது என்று மிரால் (Miral) சமீபத்தில் அறிவித்துள்ளது. யாஸ் தீவில் அமைந்துள்ள விரிவாக்கப்பட்ட பகுதி, சுமார் 13,445 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் புதிய நீர் சவாரிகள் (water ride) மற்றும் குடும்ப நட்பு இடங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, ‘Lost City’  என்ற கருப்பொருளைக் கொண்ட புதிய மண்டலம், பார்க்கின் அசல் கதைக்களமான ‘The Legend of the Lost Pearl’ஐத் தொடர்கிறது, மேலும் 20 புதிய சவாரிகள் மற்றும் ஸ்லைடுகள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பு, அனைத்து வயதினருக்கும் வேடிக்கை நிறைந்த ஒரு புதிய சாப்பாட்டு அனுபவத்துடன் வழங்குகிறது.

புதிய சவாரிகளின் சிறப்பம்சங்கள்

  • அல் மஃப்ராஸ் (Al Mafras)- குழந்தைகளுக்கான பாலைவன கருப்பொருள் வளைந்த நீர் சறுக்கு (desert water slide for kids with a splash landing).
  • ரெட் டூன்ஸ் (Red Dunes) – அதிவேக, மூடப்பட்ட குழாய் சறுக்கு (twisting, closed aqua tube slide)
  • அல் ஃபலாஜ் ரேஸ் (Al Falaj Race) – பிராந்தியத்தின் முதல் பக்கவாட்டு டூலிங் டியூப் ராஃப்ட் சவாரி (region’s first side-by-side dueling tube raft race).
  • அல் சஹேல் ஜூனியர் (Al Sahel Junior)
  • தவ்வாமா ஜூனியர் (Dawwama Junior)

மற்ற புதிய ஈர்ப்புகளில் மாதாஹா மேட்னஸ் (Mataha Madness), சதாஃப் ஸ்வர்ல் (Sadaf Swirl), பஹாமுட்டின் ரேஜ் (Bahamut’s Rage) மற்றும் பண்டிட்டின் விளையாட்டு மைதானம் (Bandit’s Playground) ஆகியவை அடங்கும். இந்த விரிவாக்கத்துடன், யாஸ் வாட்டர்வேர்ல்ட் இப்போது 60 க்கும் மேற்பட்ட நீர் சார்ந்த ஈர்ப்புகளைக் கொண்டுள்ளது, இது அனைத்து வயதினருக்கும் பெரிய மற்றும் மிகவும் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel