ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் ஹிஜ்ரி புத்தாண்டு 1447 தினத்தை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கும் எல்லா இடங்களிலும் உள்ள முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்கள். வரவிருக்கும் ஆண்டு பிராந்தியத்திற்கும் உலகிற்கும் நீடித்த அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வரவும், அனைவருக்கும் முன்னேற்றத்தையும் செழிப்பையும் முன்னேற்றவும் நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும், மக்களுக்கு தனது வாழ்த்துக்களைப் பின்வருமாறு பகிர்ந்து கொண்டார்: “புதிய ஹிஜ்ரி ஆண்டு 1447 இல் அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்தை நாங்கள் வாழ்த்துகிறோம். இது நன்மை, ஆசீர்வாதம் மற்றும் செழிப்பு நிறைந்த ஆண்டாக இருக்க அல்லாஹ்வை வேண்டுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் நமது மக்களுக்கு அதிக அழகு, சிறந்த நாட்கள் மற்றும் தொடர்ச்சியான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகம் ஜூன் 27 வெள்ளிக்கிழமை பொது விடுமுறையாக அறிவித்தது. எனவே, பெரும்பாலான குடியிருப்பாளர்கள் மூன்று நாள் வார விடுமுறையை அனுபவிப்பார்கள், ஜூன் 30 திங்கட்கிழமை பணிகள் மீண்டும் தொடங்கும்.
விடுமுறைக்காக பொது சேவைகளில் மாற்றங்கள்
- துபாய் முழுவதும் இலவச பார்க்கிங் கிடைக்கும் (மல்டி லெவல் பார்க்கிங் தவிர)
- துபாய் மெட்ரோ ஜூன் 27 ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் ஜூன் 28 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை செயல்படும்.
- துபாய் டிராம் ஜூன் 27 ஆம் தேதி காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை இயங்கும்.
இஸ்லாமிய புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் வியாழக்கிழமை அதிகாலை அபுதாபியில் பிறை நிலவு காணப்பட்டதை ஐக்கிய அரபு அமீரகத்தின் வானியல் மையமும் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel