ADVERTISEMENT

UAE: ஷார்ஜாவை கோர்ஃபக்கானுடன் இணைக்கும் புதிய சாலை.. பயண நேரத்தை குறைக்கும் என தகவல்..

Published: 17 Jul 2025, 8:33 PM |
Updated: 17 Jul 2025, 8:39 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவை கோர்ஃபக்கானுடன் இணைக்கும் ஒரு அற்புதமான புதிய சாலைத் திட்டத்தை உச்ச கவுன்சிலின் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காசிமி அறிவித்துள்ளார். இந்தச் சாலை ஷார்ஜாவின் மிக உயரமான மலைச் சிகரங்களின் வழியாகச் சென்று, கடல் மட்டத்திலிருந்து 1,100 மீட்டர் உயரம் வரை உயரும் என்றும், அல் குசைர் சுரங்கப்பாதையில் இருந்து தொடங்கி கோர்பக்கானில் உள்ள மிக உயரமான மலை சிகரத்தை அடைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இது பயணிகளுக்கு அற்புதமான காட்சிகளையும், சிறந்த ஓட்டுநர் அனுபவத்தையும் வழங்கும் என்றும் கூறப்படுகின்றது. மேலும், டாக்டர் சுல்தான் இதை “இதுவரை கண்டிராத அதிசயம்” என்று விவரித்துள்ளார். ஷார்ஜா வானொலி மற்றும் தொலைக்காட்சியில் (Sharjah Radio and Television) ‘Direct Line’ நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சுல்தான், இந்த சாலையில் பசுமையான நிலப்பரப்புகள், நீர் கால்வாய்கள் மற்றும் வழியில் அழகாக வடிவமைக்கப்பட்ட வீடுகள் இருக்கும் என்று கூறியுள்ளார்.

அல் குஸைர் சுரங்கப்பாதையில் இருந்து செல்லும் இந்த சாலை, பிராந்தியத்தின் இயற்கை அழகின் பரந்த காட்சிகளை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. பார்வைக்கு பிரமிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், இந்த சாலை ஷார்ஜாவிற்கும் கோர்ஃபக்கனுக்கும் இடையிலான பயண நேரத்தைக் குறைக்கும் என்றும், பிராந்திய வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் எமிரேட்டில் இணைப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான டாக்டர் சுல்தானின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel