துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), புதிய துபாய் மெட்ரோ நீலப் பாதைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், அகாடெமிக் சிட்டியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. நகரின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் ஒரு பெரிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த மெட்ரோ blue line உள்ளது.
இது செப்டம்பர் 9, 2029 அன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், முக்கிய குடியிருப்பு பகுதிகளை துபாய் சர்வதேச விமான நிலையத்துடன் வெறும் 20 நிமிடங்களில் இணைக்கும் மற்றும் அருகிலுள்ள சாலைகளில் நெரிசலை 20 சதவீதம் வரை குறைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த பாதை ஒரு முக்கிய தொழில்நுட்ப மற்றும் வணிக மையமான துபாய் சிலிக்கான் ஒயாசிஸுடனும் இணைக்கிறது.
சமீபத்திய புதுப்பிப்புகளின் ஒரு பகுதியாக, ஜெர்மன் இன்டர்நேஷனல் ஸ்கூலுக்கு அருகிலுள்ள இரு திசைகளிலும் 63 ஸ்ட்ரீட் மூடப்படும், மேலும் பள்ளிக்கான மாற்று நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகள் மூலம் ஷேக் சையத் பின் ஹம்தான் ஸ்ட்ரீட்டை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் புதுப்பிக்கப்பட்ட வரைபடங்களைச் சரிபார்க்கவும், மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதே திட்டத்தின் ஒரு பகுதியாக மிர்டிஃபில் இதேபோன்ற போக்குவரத்து மாற்றங்கள் முன்பு அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel