துபாயில் உள்ள அதிகாரிகள் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதை ரெசிடென்ஸி விசாக்களை வழங்கும் அல்லது புதுப்பிக்கும் செயல்முறையுடன் இணைக்கும் ஒரு புதிய அமைப்பை பரிசோதித்து வருவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. புதிய முறையைப் பொறுத்தவரை, நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களைக் கொண்ட குடியிருப்பாளர்கள் தங்கள் விசா நடைமுறைகளை முடிப்பதற்கு முன்பு அவற்றை முழுமையாகவோ அல்லது தவணைகள் மூலமாகவோ செலுத்த வேண்டும். துபாயின் ரெசிடென்ஸி மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) தலைமையிலான இந்த முயற்சி, பொறுப்பாக வாகனம் ஓட்டுவதையும், சரியான நேரத்தில் கட்டணம் செலுத்துவதையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“மக்களை கட்டுப்படுத்துவது இதன் குறிக்கோள் அல்ல” என்று துபாயில் உள்ள GDRFA இன் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி கூறியுள்ளார். மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “இது குடியிருப்பாளர்கள் தங்கள் அபராதங்களை செலுத்த நினைவூட்டுவதாகும். ஒவ்வொரு வழக்கையும் பொறுத்து இந்த அமைப்பு நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது.” என்பதையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
விசா புதுப்பிப்புகளை இந்த அமைப்பு முற்றிலுமாகத் தடுக்கவில்லை என்றாலும், விசா விண்ணப்ப செயல்முறையின் போது நிலுவையில் உள்ள எந்தவொரு அபராதத்தையும் தீர்க்க தனிநபர்களைத் தூண்டுகிறது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், பல சந்தர்ப்பங்களில் தவணைகளுக்கான விருப்பங்களுடன், கட்டணச் செயல்முறை மூலம் குடியிருப்பாளர்கள் வழிநடத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது மற்றும் இன்னும் நடைமுறைக்கு பயன்படுத்தப்படவில்லை. எடுத்துக்காட்டாக, துபாய் விமான நிலையத்தின் GDRFA மையத்தில் இது தற்போது நடைமுறையில் இல்லை. இந்த அமைப்பு நடைமுறைக்கு ஏற்றதாகவும் பயனர் நட்புடனும் இருப்பதை உறுதி செய்வதற்காக, சோதனையைத் தொடங்குவதற்கு முன்பு அதிகாரிகள் ஆயிரக்கணக்கான வழக்குகளை மதிப்பாய்வு செய்தனர்.
இதுபோன்ற நடவடிக்கை அறிமுகப்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2014 ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் இதேபோன்ற நடவடிக்கையை பரிசீலித்தது, செலுத்தப்படாத போக்குவரத்து அபராதம் உள்ள நபர்களுக்கு விசாக்கள் புதுப்பிக்கப்படாது என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel