ADVERTISEMENT

துபாயில் சாலிக் கேட்களை கட்டணமின்றி கடக்க முடியுமா?? கட்டண நேரங்கள், டோல் விதிகள் உள்ளிட்ட முழுவிபரம் உள்ளே…

Published: 29 Jul 2025, 8:21 PM |
Updated: 29 Jul 2025, 8:23 PM |
Posted By: Menaka

துபாயில் வாகனம் ஓட்டுபவர்கள் ஒவ்வொரு முறை டோல் கேட்களைக் கடக்கும் போதும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது தினசரி பயணிப்பவர்களின் செலவை அதிகரிக்கிறது.  உண்மையில், சாலிக் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது டோல் கேட்களின் கட்டணமில்லா நேரங்கள், கட்டண நேரங்கள், முக்கிய விதிகள் மற்றும் டோல் கேட் அமைந்துள்ள இடம் போன்ற முழு விபரங்களைத் தெரிந்து திட்டமிட்டு செல்வதன் மூலம் வாகன ஓட்டிகள் பணத்தை கணிசமாக மிச்சப்படுத்தலாம். சாலிக் வாயில்கள் பற்றி வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

சாலிக் நேரங்கள் மற்றும் கட்டணங்கள்

சாலிக் கேட்கள் சில நெரிசல் இல்லாத நேரங்களில் கட்டணம் வசூலிக்கப்படாமல் கடந்து செல்ல உங்களை அனுமதிக்கின்றன.

திங்கள் முதல் சனி வரை:

  • நெரிசலான நேரங்கள் (6 திர்ஹம்ஸ்): காலை 6 – 10 மணி, மாலை 4 – இரவு 8 மணி
  • குறைந்தபட்ச நெரிசல் நேரங்கள் (4 திர்ஹம்ஸ்): காலை 10 – மாலை 4 மணி, இரவு 8 – அதிகாலை 1 மணி
  • நெரிசல் இல்லாத நேரம் (இலவசம்): அதி காலை 1 – அதிகாலை 6 மணி

ஞாயிற்றுக்கிழமைகள்:

  • பிளாட் ரேட்: நாள் முழுவதும் 4 திர்ஹம்ஸ்
  • கட்டணமில்லா நேரம்: அதிகாலை 1 – 6 மணி

ரமலானின் போது:

  • நெரிசலான நேரங்கள் (6 திர்ஹம்ஸ்): காலை 9 – மாலை 5 மணி
  • குறைந்தபட்ச நெரிசல் நேரங்கள் (4 திர்ஹம்ஸ்): காலை 7 – 9 மணி, மாலை 5 – 2 மணி
  • நெரிசல் இல்லாத நேரம் (இலவசம்): அதிகாலை 2 – 7 மணி

இந்த கட்டணங்களில் ஏதேனும் விதிவிலக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டால், பொது விடுமுறை நாட்களிலும் இந்த கட்டணங்கள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஒரு மணி நேர விதி

நீங்கள் அல் சஃபா அல்லது அல் மம்சார் கேட்கள் வழியாக வாகனம் ஓட்டினால், அதே திசையில் ஒரு மணி நேரத்திற்குள் அருகிலுள்ள மற்றொரு கேட்டை கடந்து சென்றால் ஒரு முறை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். வாயில்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக அமைந்திருக்கும் போது கட்டணங்களைக் குறைக்க இது உதவுகிறது.

இது பின்வரும் கேட்களுக்கு பொருந்தும்:

ADVERTISEMENT
  • அல் மம்சார் நார்த் மற்றும் சவுத்
  • அல் சஃபா நார்த் மற்றும் சவுத்
  • அல் மம்சார் மற்றும் அல் சஃபா இடையே

நீங்கள் ஒரு மணி நேரத்திற்குள் ஒரே திசையில் இரண்டையும் கடந்து சென்றால், ஒரு டோல் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

சாலிக்கைப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?:

1. ஒரு சாலிக் டேக்கை வாங்கி உங்கள் காரின் விண்ட்ஷீல்டில் ஒட்டவும்.
2. உங்கள் அக்கவுண்டின் மூலம் டேக்கைச் செயல்படுத்தவும்.
3. உங்கள் அக்கௌண்ட்டை ரீசார்ஜ் செய்யவும்
4. டோல் வாயில் வழியாக வாகனம் ஓட்டும் போது, இந்த அமைப்பு தானாகவே கட்டணத்தைக் கழிக்கிறது.

சாலிக் வாயில்கள் அமைந்துள்ள இடங்கள்

துபாயில் தற்போது முக்கிய இடங்களில் 10 சாலிக் சுங்கச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன:

  1. அல் சஃபா நார்த் – ஷேக் சையத் சாலை
  2. அல் சஃபா சவுத் – ஷேக் சையத் சாலை
  3. அல் பர்ஷா – ஷேக் சையத் சாலை
  4. ஜெபல் அலி – ஷேக் சையத் சாலை
  5. பிசினஸ் பே கிராசிங் – அல் கைல் சாலை
  6. அல் கர்ஹூத் பிரிட்ஜ் – ஷேக் ரஷீத் சாலை
  7. அல் மக்தூம் பிரிட்ஜ் – உம் ஹுரைர் சாலை
  8. ஏர்போர்ட் டன்னல் – பெய்ரூட் தெரு
  9. அல் மம்சார் நார்த் – அல் இத்திஹாத் சாலை
  10. அல் மம்சார் சவுத் – அல் இத்திஹாத் சாலை

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel