துபாயின் வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கள்தொகை மற்றும் அதிகரிக்கும் வாகன எண்ணிக்கை போன்ற காரணிகளால் பார்க்கிங் தேவை அதிகரித்து வரும் நிலையில், நகரம் பல்வேறு நெகிழ்வான, செலவு குறைந்த அனுமதி விருப்பங்களை வழங்குகிறது. நீங்கள் தினசரி பயணியாக இருந்தாலும் சரி, குடியிருப்பாளராக இருந்தாலும் சரி, மாணவராக இருந்தாலும் சரி, நகரத்தின் பொது பார்க்கிங் ஆபரேட்டரான பார்கின், பல்வேறு மண்டலங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப துபாய் பல பார்க்கிங் சந்தா திட்டங்களை வழங்குகிறது. அனைத்து அனுமதி விண்ணப்பங்களையும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ போர்டல் மூலம் ஆன்லைனில் செய்யலாம்: parkin.ae
துபாயில் பார்க்கிங் அனுமதி ஏன் பெற வேண்டும்?
துபாயின் கட்டண பார்க்கிங் மண்டலங்களில் அடிக்கடி வாகனம் நிறுத்துபவர்களுக்கு, பெரும்பாலும் மணிநேரம் அல்லது ஒரு நாளுக்கு கட்டணம் செலுத்துவதை விட சந்தா முறையில் கட்டணம் செலுத்துவது மலிவானதாக இருக்கும். இது அபராதங்களைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் மாதாந்திர போக்குவரத்து செலவுகளை கணிக்கக்கூடியதாக ஆக்குகிறது.
பார்க்கிங் அனுமதி வகைகள்
1. சாலையோர மற்றும் பிளாட் பார்க்கிங் (மண்டலங்கள் A, B, C, D)
நான்கு முக்கிய மண்டலங்களில் ஒருங்கிணைந்த சாலையோர மற்றும் ப்ளாட் பார்க்கிங் (roadside and plot) சந்தாவைப் பயன்படுத்தி வாகனத்தை நிறுத்தலாம். இதில் பொது சாலைகள் மற்றும் அருகிலுள்ள நியமிக்கப்பட்ட பகுதிகள் அடங்கும். அதே நேரத்தில் சாலையோர பார்க்கிங்கை தொடர்ந்து 4 மணி நேரமும் பிளாட் பார்க்கிங்கை தொடர்ந்து 24 மணி நேரம் வரையே பார்க்கிங் செய்ய வேண்டும்.
சந்தா கட்டணம்
- 1 மாதம்: 500 திர்ஹம்ஸ்
- 3 மாதங்கள்: 1,400 திர்ஹம்ஸ்
- 6 மாதங்கள்: 2,500 திர்ஹம்ஸ்
- 12 மாதங்கள்: 4,500 திர்ஹம்ஸ்
அனுமதிகள் செல்லுபடியாகும் காலம்:
- A மற்றும் C மண்டலங்களில் சாலையோர பார்க்கிங் (தொடர்ச்சியாக 4 மணிநேரம் வரை)
- B மற்றும் D மண்டலங்களில் பிளாட் பார்க்கிங் (24 மணிநேரம் வரை)
2. பிளாட்-மட்டும் பார்க்கிங் (மண்டலங்கள் B மற்றும் D)
இந்த அனுமதி சாலையோர இடங்களை விட பிளாட் பகுதி பார்க்கிங் இடங்களை மட்டும் (Plot-Only Parking) முக்கியமாகப் பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- 1 மாதம்: 250 திர்ஹம்ஸ்
- 3 மாதங்கள்: 700 திர்ஹம்ஸ்
- 6 மாதங்கள்: 1,300 திர்ஹம்ஸ்
- 12 மாதங்கள்: 2,400 திர்ஹம்ஸ்
3. துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் (மண்டலம் H மற்றும் வரையறுக்கப்பட்ட பகுதி)
DSO இல் வசிப்பவர்களுக்கும் அப்பகுதிக்கு செல்லும் வழக்கமான பார்வையாளர்களுக்கும் இரண்டு வகையான சந்தா தொகுப்புகள் கிடைக்கின்றன.
மண்டலம் H சந்தா: குடியிருப்பு சமூகத்திற்குள் நெகிழ்வான பார்க்கிங் சந்தாவை வழங்குகிறது. ஒவ்வொரு சந்தாவிலும் 5% VAT அடங்கும்
- 3 மாதங்கள்: 1,400 திர்ஹம்ஸ்
- 6 மாதங்கள்: 2,500 திர்ஹம்ஸ்
- 12 மாதங்கள்: 4,500 திர்ஹம்ஸ்
லிமிடெட் ஏரியா (பட்ஜெட்டுக்கு ஏற்றது): மண்டலம் H-க்கு அணுகல் தேவையில்லாதவர்களுக்கு இந்த பார்க்கிங் ஏற்றது.
- 3 மாதங்கள்: 1,000 திர்ஹம்ஸ்
- 6 மாதங்கள்: 1,500 திர்ஹம்ஸ்
- 12 மாதங்கள்: 2,500 திர்ஹம்ஸ்
குறிப்பு: ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பார்க்கிங் (reserved areas) அனுமதிக்கப்படாது. ஒரு பெர்மிட்டிற்கு ஒரு வாகனம் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும்.
4. துபாய் ஹில்ஸ்
இந்த சந்தா துபாய் ஹில்ஸ் சமூகம் முழுவதும் நியமிக்கப்பட்ட பார்க்கிங் இடங்களுக்கான அணுகலை வழங்குகிறது.
1 மாதம்: 500 திர்ஹம்ஸ்
3 மாதங்கள்: 1,400 திர்ஹம்ஸ்
6 மாதங்கள்: 2,500 திர்ஹம்ஸ்
12 மாதங்கள்: 4,500 திர்ஹம்ஸ்
5. வாஸ்ல் ரியல் எஸ்டேட் மண்டலங்கள் (Wasl Real Estate Parking) (W மற்றும் WP)
கராமா, அல் கிஃபாஃப் மற்றும் அல் குசைஸ் போன்ற பகுதிகளுக்கு மலிவு விலையில் சந்தா திட்டங்களை வழங்குகிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் செயல்படுகிறது.
- 1 மாதம்: 300 திர்ஹம்ஸ்
- 3 மாதங்கள்: 800 திர்ஹம்ஸ்
- 6 மாதங்கள்: 1,600 திர்ஹம்ஸ்
- 12 மாதங்கள்: 2,800 திர்ஹம்ஸ்
6. மாணவர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கான பார்க்கிங் அனுமதிகள்
பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள், கல்வி மற்றும் நிர்வாக ஊழியர்கள், வளாகங்களுக்கு அருகில் (A–D மண்டலங்களில் மற்றும் வளாகங்களில் இருந்து 500 மீட்டருக்குள்) தள்ளுபடி செய்யப்பட்ட பார்க்கிங் பெர்மிட்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் செல்லுபடியாகும் மாணவர் ஐடியை வழங்கினால் 80% தள்ளுபடி பெறுகிறார்கள். ஒரு பெர்மிட்டிற்கு ஒரு வாகனம் மட்டுமே நிறுத்த முடியும்.
நிலையான கட்டணம்:
- 1 மாதம்: 100 திர்ஹம்ஸ்
- 3 மாதங்கள்: 300 திர்ஹம்ஸ்
- 6 மாதங்கள்: 600 திர்ஹம்ஸ்
- 12 மாதங்கள்: 1,200 திர்ஹம்ஸ்
7. மல்டி ஸ்டோரீ பார்க்கிங்
அதிக போக்குவரத்து கொண்ட வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு மல்டி ஸ்டோரி (multi storey parking) பார்க்கிங் சந்தாக்கள் பாதுகாப்பான, 24 மணி நேரமும் அணுகலை வழங்குகின்றன.
- 1 மாதம்: 735 திர்ஹம்ஸ்
- 3 மாதங்கள்: 2,100 திர்ஹம்ஸ்
- 6 மாதங்கள்: 4,200 திர்ஹம்ஸ்
- 12 மாதங்கள்: 8,400 திர்ஹம்ஸ்
விதிமுறைகள்:
- ஒரு போக்குவரத்து கோப்பில் 5 வாகனங்கள் வரை பதிவு செய்யலாம் (ஒரே நேரத்தில் 1 வாகனம் மட்டுமே நிறுத்த முடியும்)
- ஒரு வாகனம் தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தால் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்
- ஒரே நேரத்தில் நிறுத்தப்படும் கூடுதல் வாகனங்களுக்கு நிலையான மணிநேரக் கட்டணங்கள் பொருந்தும்
மல்டி லெவல் பார்க்கிங் வசதிகள் உள்ள இடங்கள்:
அல் குபைபா, அல் சப்கா, நைஃப், ஓத் மேத்தா, அல் சத்வா, அல் ரிக்கா, பானியாஸ் மற்றும் அல் ஜாஃபிலியா
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel