தினசரி அதிகளவு போக்குவரத்தை எதிர்கொள்ளும் துபாய் மற்றும் ஷார்ஜா இடையே குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் எளிதாக பயணிக்க உதவும் போக்குவரத்து முறைகளில் ஒன்று ஃபெர்ரி மூலம் பயணம் செய்வதாகும். இதற்கான, டிக்கெட்டுகள் 15 திர்ஹம்ஸ் முதல் தொடங்குகின்றன. முதலில் 2019 இல் தொடங்கப்பட்ட இந்த ஃபெர்ரி சேவை COVID-19 தொற்றுநோய் காலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) 2023 இல் நகரங்களுக்கு இடையேயான இந்த கடல் சேவையை மீண்டும் தொடங்கியது. இந்த சேவை, இரண்டு எமிரேட்களுக்கு இடையேயான சாலைப் பயணத்திற்கு வசதியான மாற்று போக்குவரத்து முறையை வழங்குகிறது.
ஃபெர்ரி நிலையங்கள்
துபாயில், பர் துபாயின் அல் ஃபஹிதி மாவட்டத்தில் அமைந்துள்ள அல் குபைபா மரைன் நிலையத்திலிருந்து ஃபெர்ரி புறப்படுகிறது. இந்த நிலையத்தை எளிதில் அணுகலாம், கிரீன் லைனில் உள்ள அல் குபைபா மெட்ரோ நிலையத்திலிருந்து இரண்டு நிமிட நடைப்பயணத்தில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜாவில், பயணிகள் ஷார்ஜா அக்வாரியத்தை ஒட்டியுள்ள அல் மஜாஸ் 3 பகுதியில் உள்ள அக்வாரியம் மரைன் நிலையத்தில் ஃபெர்ரியில் பயணிக்கலாம். இந்த நிலையத்தை மொவாசலாத் (Mowasalat) பொது பேருந்துகள், குறிப்பாக ரூட் 3 மற்றும் ரூட் 7 வழியாக அணுகலாம்.
பயண காலம்
துபாய்க்கும் ஷார்ஜாவிற்கும் இடையிலான ஃபெர்ரி பயணம் தோராயமாக 35 நிமிடங்கள் ஆகும்.
கால அட்டவணை
திங்கள் முதல் வியாழன் வரை, ஒரு நாளைக்கு எட்டு பயணங்கள் உள்ளன:
- ஷார்ஜாவிலிருந்து புறப்படும் நேரம்: காலை 7:00, காலை 8:30, மாலை 4:45, மற்றும் மாலை 6:15 மணி
- துபாயிலிருந்து புறப்படும் நேரம்: காலை 7:45, மாலை 4:00, மாலை 5:30, மற்றும் மாலை 7:00 மணி
வெள்ளி முதல் ஞாயிறு வரை, ஆறு பயணங்கள் கிடைக்கின்றன:
- ஷார்ஜாவிலிருந்து புறப்படும் நேரம்: பிற்பகல் 2:00, மாலை 4:00, மற்றும் மாலை 6:00
- துபாயிலிருந்து புறப்படும் நேரம்: பிற்பகல் 3:00, மாலை 5:00, மற்றும் இரவு 8:00
டிக்கெட் விலைகள்
- சில்வர் கிளாஸ்: 15 திர்ஹம்ஸ்
- கோல்டு கிளாஸ்: 25 திர்ஹம்ஸ்
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்
டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது?
RTAவின் கடல்சார் வலைத்தளம் (marine.rta.ae) மூலம் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கலாம். உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை வாங்கலாம். மாற்றாக, பயணிகள் கடல் நிலைய வாடிக்கையாளர் சேவை கவுண்டர்களிலும் டிக்கெட்டுகளை வாங்கி நோல் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, துபாய் மற்றும் ஷார்ஜா இடையே பயணிக்க ஃபெர்ரி சேவை ஒரு அழகிய மற்றும் திறமையான வழியை வழங்குகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel