ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான கோடை வெப்பம் நீடிக்கும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பதிவாகியுள்ளது. முன்னதாக, தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) நிலையற்ற வானிலையை முன்னறிவித்திருந்தது, அதேபோல் கணிப்புகள் இன்று துல்லியமாக நிரூபிக்கப்பட்டது.
NCM வெளியிட்ட முன்னறிவிப்பின் படி, இன்று அபுதாபி மற்றும் அல் அய்னில் மழை பதிவாகியது, பின்னர் பிற்பகலில் ஆலங்கட்டி மழையாக மாறியது. இதனை தொடர்ந்து, NCM வெளிப்புற நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதேசமயம், ஈரமான சாலைகள் மற்றும் மாறிவரும் வானிலை காரணமாக ஓட்டுநர்கள் விழிப்புடன் இருக்குமாறு அபுதாபி காவல்துறை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது, குறிப்பாக மின்னணு பலகைகளில் காட்டப்படும் மாறி வேக வரம்புகளைப் பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளை நினைவூட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வானிலை ஆர்வலர்கள் அபுதாபியின் சாதியத் ஐலேண்டில் மழை பெய்யும் வீடியோக்களையும், புஜைராவில் கனமழையின் முந்தைய காட்சிகளையும் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இன்றைய நாளின் பிற்பகுதியில், ஷார்ஜாவிலும் மழை பெய்ததாகக் கூறப்படுகிறது.
الامارات : الان تساقط البرد شمال العين طريق الهير بدع بن أحمد #أخبار_الإمارات #مركز_العاصفة
7_8_2025 pic.twitter.com/RLR0OucyUz— مركز العاصفة (@Storm_centre) August 7, 2025
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel