குடியிருப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோடை விழாவான துபாய் சம்மர் சர்ப்ரைஸ் (DSS) 2025, கோலாகலமாக நிறைவடையவிருக்கிறது. அதாவது DSS-ன் கடைசி வார இறுதியில் கிரேட் துபாய் சம்மர் சேல் (GDSS) வருகிறது, இது முழு குடும்பத்திற்கும் அதிரடியான சலுகைகள், பொழுதுபோக்கு மற்றும் அற்புதமான அனுபவங்களுடன் நிரம்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தவறவிடக்கூடாத ஒரு கண்கவர் ஷாப்பிங் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு நிகழ்வுகளின் வரிசைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்
கிரேட் துபாய் சம்மர் சேல் – ஆகஸ்ட் 8 முதல் 10 வரை
இந்த வார இறுதியில் GDSS இன் மிகப்பெரிய இறுதி விற்பனை நடைபெறவுள்ளது, இது துபாயில் உள்ள 1,500 க்கும் மேற்பட்ட கடைகளில் 90 சதவீதம் வரை மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. எனவே, ஷாப்பிங் செய்பவர்கள் ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், அழகு சாதனப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள், நகைகள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்களுக்கான சலுகைகளை அனுபவிக்கலாம். இது கோடைகால பள்ளிக்குச் செல்லும் ஷாப்பிங் கொண்டாட்டத்திற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
பங்கேற்கும் மால்கள் மற்றும் ஷாப்பிங் இடங்களில் துபாய் மால், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் தேரா, துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால், இபின் பட்டுடா மால், தி அவுட்லெட் வில்லேஜ், பர்ஜுமான் மால், நக்கீல் மால், சிட்டி வாக் மற்றும் பல அடங்கும். குறிப்பிட்ட கடைக்கான சலுகைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட திறந்திருக்கும் நேரங்களுக்கு ஷாப்பிங் செய்பவர்கள் தனிப்பட்ட மால் வலைத்தளங்களைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மோடேஷ் வேர்ல்டு (Modesh World)-ஆகஸ்ட் 28 வரை
இந்தக் கோடையில் உட்புற பொழுதுபோக்குகளைத் தேடும் குடும்பங்களுக்கு, மோடேஷ் வேர்ல்டின் 26வது பதிப்பு துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் தொடர்கிறது. இந்த வருடாந்திர ஈர்ப்பு, பல்வேறு மண்டலங்கள், சவாரிகள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் அன்பான துபாய் கதாபாத்திரங்களான மோடேஷ் மற்றும் டானா இடம்பெறும் ஒர்க் ஷாப் மூலம் விளையாட்டு மற்றும் கற்றல் ஆகியவற்றின் கலவையை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடேஷ் வேர்ல்ட் வார நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மற்றும் வார இறுதி நாட்களில் நள்ளிரவு வரை திறந்திருக்கும். விளையாடும் குழந்தைக்கு டிக்கெட்டுகள் 150 திர்ஹம் மற்றும் விளையாடாத பார்வையாளர்களுக்கு 75 திர்ஹம் ஆகிய விலைகளில் கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல், எசாத் (Esaad) மற்றும் அல் சாதா (Al Saada) கார்டு வைத்திருப்பவர்களுக்கு தள்ளுபடிகள் கிடைக்கின்றன. மாற்றுத்திறனாளி மற்றும் அவர்களுடன் வரும் ஒரு பராமரிப்பாளருக்கும் நுழைவு இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக்கால முகாம்கள் – ஆகஸ்ட் 31 வரை
துபாயின் கோடைக்கால முகாம்கள் விடுமுறை நாட்களில் குழந்தைகளை ஈடுபாட்டுடன் வைத்திருக்க கலை, கலாச்சாரம், அறிவியல் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளின் கலவையை வழங்குகின்றன.
- அல் ஜலீலா குழந்தைகளுக்கான கலாச்சார மையத்தில், பர்ஸ்ட் ஆஃப் இமேஜினேஷன் கேம்ப் ஆகஸ்ட் 4 முதல் 15 வரை பபிள் ஓவியம் (bubble painting), திரவ கலை (liquid art), சிற்பம் போன்ற ஒர்க் ஷாப்களுடன் நடைபெறுகிறது.
- பெல் ரெமைதா கிளப் டேக்வாண்டோ, நீச்சல், கால்பந்து மற்றும் கூடைப்பந்து ஆகியவற்றுடன் விளையாட்டு சார்ந்த முகாமை வழங்குகிறது. இதற்கான கட்டணங்கள் 110 திர்ஹம்ஸ் ஆரம்ப விலையில் தொடங்குகின்றன.
- க்ரீக் பூங்காவில் உள்ள சில்ட்ரன்ஸ் சிட்டியில், தினசரி ஓர்க்ஷாப், இயற்கை மற்றும் தொழில்நுட்பத்தை வேடிக்கையான வழிகளில் ஆராயகூடிய வாய்ப்பை பெறலாம்.
லெகோலேண்ட் வாட்டர் பார்க்- நியான் நைட்ஸ்
LEGOLAND வாட்டர் பார்க் வார இறுதியில் அதன் நியான் நைட்ஸ் நிகழ்வுடன் இரவுகளை ஒளிரச் செய்கிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் செப்டம்பர் வரை மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் லேசர்கள், நியான் விளக்குகள் மற்றும் நேரடி நடன நிகழ்ச்சி இடம்பெறும். இதன் விலை ஆன்லைனில் 295 திர்ஹம்ஸ் மற்றும் நுழைவாயிலில் 330 திர்ஹம்ஸ் ஆகும்.
ஆகஸ்ட் 24 வரை நடைபெறும் ‘Summer Splash Fest’இன் பிற சிறப்பம்சங்களில் நேரடி நிகழ்ச்சிகள், நீச்சல் குளத்தின் ஓரத்தில் DJக்கள், வேடிக்கையான சவால்கள், குழந்தைகள் இலவச உணவுச் சலுகைகள், தள்ளுபடியில் தனியார் கபனா (private cabana) ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, நீங்கள் மெகா தள்ளுபடிகளைத் தேடினாலும் அல்லது குழந்தைகளை மகிழ்விக்க விரும்பினாலும், DSS 2025 இன் இறுதி வார இறுதியில் அனைவருக்கும் சிறந்த அனுபவங்கள் காத்திருக்கின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel