ADVERTISEMENT

வெளிநாட்டவர்களுக்கு புதிய வகை ரெசிடென்ஸ் கார்டுகளை அறிமுகப்படுத்திய ஓமான்…!!

Published: 12 Aug 2025, 9:01 PM |
Updated: 12 Aug 2025, 9:06 PM |
Posted By: Menaka

ஓமானில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கான குடியிருப்பு அட்டைகள் (Residence card) மற்றும் ஓமாn குடிமக்களுக்கான அடையாள அட்டைகளுக்கான (Omani ID) புதிய செல்லுபடியாகும் காலம் மற்றும் கட்டண விருப்பங்களை ராயல் ஓமன் காவல்துறை (ROP) அறிமுகப்படுத்தியுள்ளது. காவல்துறை மற்றும் சுங்கத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ஹசன் பின் மொஹ்சின் அல் ஷ்ரைகி அவர்கள் வெளியிட்ட முடிவு எண் 78/2025 இன் கீழ், வெளிநாட்டவர் தங்கள் ரெசிடென்ஸி கார்டுகளை இப்போது 1, 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முறையே 5, 10 மற்றும் 15 ரியால் கட்டணங்களுடன் பெறலாம், மேலும் சேதமடைந்த கார்டுகளை மாற்றுவதற்கு 20 ரியால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, ஓமான் குடிமக்களின் அடையாள அட்டையின் செல்லுபடியாகும் காலம் 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, அனைத்து குடியிருப்பு மற்றும் அடையாள அட்டை வைத்திருப்பவர்களும் சட்ட சிக்கல்களைத் தவிர்க்க, காலாவதியான 30 நாட்களுக்குள் அவற்றை புதுப்பிக்க வேண்டும் என்று திருத்தப்பட்ட விதிமுறைகள் வலியுறுத்துகின்றன.

இது குடியிருப்பாளர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதையும் புதுப்பித்தல் நடைமுறைகளை நெறிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறித்து ROP வெளியிட்ட ஒரு அறிக்கையில், “இந்த திருத்தங்கள் நிர்வாக செயல்முறைகளை எளிதாக்குவதற்கும், குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்வான விருப்பங்களை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்று விளக்கமளித்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel