ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆன்லைன் வழியாக ஒரு அரசாங்க சேவைக்கு பதிவுசெய்தால், உங்கள் எமிரேட்ஸ் ஐடியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒரு முறை கடவுச்சொல் (OTP) மூலம் உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கும்படி கேட்கப்படலாம். ஏனெனில், எமிரேட்ஸ் ஐடி என்பது ஒவ்வொரு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களும் வைத்திருக்க வேண்டிய கட்டாய தேசிய அடையாள அட்டையாகும்.
இத்தகைய சூழலில் உங்கள் மொபைல் எண் மாறியிருந்தால், அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக உங்கள் எமிரேட்ஸ் ஐடியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைப் புதுப்பிக்க விரும்பினால், அதை எப்படிச் செய்யலாம்? இது போன்ற குழப்பங்கள் குடியிருப்பாளர்களுக்கு இருக்கலாம்.
அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, குடியிருப்பாளர்கள் அதன் ஆன்லைன் சேவைகள் போர்டல் மூலம் தங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை எளிதாகப் புதுப்பிக்க முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், உங்களிடம் ஏற்கனவே ICP ஆன்லைன் கணக்கு உள்ளதா இல்லையா என்பதைப் பொறுத்து செயல்முறை மாறுபடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விருப்பம் 1: ICP அக்கவுண்ட் இல்லாத எமிரேட்ஸ் ஐடி வைத்திருப்பவர்களுக்கு
- கோரிக்கை விவரங்களை உள்ளிடவும்
- உங்கள் தேசியத்தைத் தேர்ந்தெடுத்து, கோப்பு வகையை ‘residency’ எனத் தேர்வுசெய்யவும்.
- உங்கள் கோப்பு எண் [file number] (உங்கள் விசா முத்திரையிலிருந்து) அல்லது எமிரேட்ஸ் ஐடி எண்ணை வழங்கவும்.
- பாஸ்போர்ட் எண், முழுப் பெயர் (ஆங்கிலம்/அரபு), பிறந்த தேதி, கடைசியாக நுழைந்த தேதி மற்றும் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்கவும்.
- உங்கள் தற்போதைய மொபைல் எண்ணைக் காட்டும் பெட்டியில் டிக் செய்து, புதிய எண்ணை உள்ளிடவும். உறுதிப்படுத்த இந்தப் புதிய எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
- உங்கள் குடியிருப்பு முகவரியை வழங்கி கேப்ட்சா சரிபார்ப்பை முடிக்கவும்.
- விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்யவும்
- அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சரிபார்க்கவும். தேவைப்பட்டால், திரும்பிச் சென்று திருத்தங்களைச் செய்யவும்.
- பணம் செலுத்தவும்
- இ-சேவை கட்டணத்தைச் செலுத்த நீங்கள் கட்டண போர்ட்டலுக்கு சென்று செலுத்தலாம்.
- அது முடிந்ததும், உங்கள் எண் புதுப்பிக்கப்பட்டுள்ளதை ICP அமைப்பு உறுதிப்படுத்தும்.
விருப்பம் 2: ICP ஆன்லைன் அக்கவுண்ட் கொண்ட எமிரேட்ஸ் ஐடி வைத்திருப்பவர்களுக்கு
- smartservices.icp.gov.ae ஐப் பார்வையிட்டு UAE PASS அல்லது உங்கள் ICP சான்றுகளுடன் உள்நுழையவும்.
- உங்கள் ரெசிடென்ஸ் விசாவை வழங்கிய துறை (உங்கள் எமிரேட்டின் GDRFA) ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- “module” என்பதன் கீழ், ‘other services’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பட்டியலிலிருந்து, ‘OTHER SERVICES → PERSONAL INFORMATION → UPDATE‘ என்பதைக் கிளிக் செய்யவும்.
- அடுத்தபடியாக, ‘Start service’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது, ‘service benficiary’ என்பதன் கீழ் (உங்கள் பெயர்) “the same person” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதைத் தொடர்ந்து, ‘Edit mobile number’ என்பதைத் தேர்வுசெய்து, உங்கள் புதுப்பிக்கப்பட்ட எண்ணை உள்ளிட்டு, OTP ஐக் கோரவும்.
- சரிபார்க்க SMS மூலம் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
- கடைசியாக, உங்கள் பழைய மற்றும் புதிய எண்களைக் காட்டும் சுருக்கத்தை மதிப்பாய்வு செய்யவும்.
- உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.
- செயல்முறை முடிந்ததும் ICP இணையதளத்தில் உறுதிப்படுத்தல் செய்தி தோன்றும்.
சேவை கட்டணம்
- இ- சேவை கட்டணம்: 29.40 திர்ஹம்ஸ்
- ICP கட்டணம்: 122 திர்ஹம்ஸ்
- மொத்த செலவு: 151.40 திர்ஹம்ஸ் (VAT உட்பட)
இவ்வாறு எமிரேட்ஸ் ஐடியில் உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்பட்டதும், OTP சிக்கல்களை எதிர்கொள்ளாமல், எமிரேட்ஸ் ஐடி சரிபார்ப்பு தேவைப்படும் அரசாங்க ஸ்மார்ட் சேவைகளை நீங்கள் தடையின்றி அணுக முடியும். மேலும் உதவிக்கு, குடியிருப்பாளர்கள் ICP இன் 24×7 ஹாட்லைனைத் தொடர்பு கொள்ளலாம்: 600 522222 என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel