ADVERTISEMENT

RTA: துபாயில் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ள இரண்டு மரைன் ஸ்டேஷன்கள்!!

Published: 2 Sep 2025, 8:18 AM |
Updated: 2 Sep 2025, 8:21 AM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), பழைய துபாய் சூக் (old souk) மற்றும் அல் சப்கா கடல் போக்குவரத்து நிலையங்களை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளது, இது துபாய் க்ரீக்கில் உள்ள அப்ரா சேவையை வலுப்படுத்துவதும் அதே நேரத்தில் அந்தப் பகுதியின் கலாச்சார பாரம்பரியத்தையும் பாதுகாப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கு முன்பாக பர் துபாய் மற்றும் ஓல்டு தேரா சூக் நிலையங்களை மேம்படுத்திய மேம்பாட்டுத் திட்டத்தின் இறுதி கட்டமாக இது அமைந்துள்ளது. புதிய நிலையங்களில் விரிவாக்கப்பட்ட நிழல் காத்திருப்பு பகுதிகள், மேம்படுத்தப்பட்ட விளக்குகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நிலையான, சுற்றுச்சூழல் நட்பு பொருட்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரம் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் தினசரி அப்ரா பயணிகளுக்கான அனுபவத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேம்பாடுகளின் ஒரு பகுதியாக, நிழலான காத்திருப்பு பகுதிகள் 50% விரிவுபடுத்தப்பட்டு, துபாயின் மாற்றுத்திறனாளி மக்களுக்கான குறியீட்டை பூர்த்தி செய்யும் வகையில் புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், அப்ரா ஆபரேட்டர்களுக்கான ஏர் கண்டிஷனிங் வசதியுள்ள ஓய்வுப் பகுதியையும் RTA அறிமுகப்படுத்தியுள்ளது, இது வசதியை உறுதிசெய்து செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

மேலும், விநியோகத்தை விரைவுபடுத்துதல், வளங்களை மேம்படுத்துதல், நிதி வருவாயை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார செயல்திறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக இரண்டு நிலையங்களும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டன என்பதையும் RTA எடுத்துரைத்துள்ளது.

மேலும் இந்த திட்டம் அதன் கடல் போக்குவரத்து உத்தி திட்டம் 2020–2030 இன் கீழ் வருவதாகவும், இது கடல் போக்குவரத்தை எமிரேட்டில் ஒரு முக்கிய இயக்க முறையாக நிலைநிறுத்தும் என்றும் . RTA தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டான 2025ன் முதல் பாதியில் மட்டும், கடல் போக்குவரத்து மூலம் 9.7 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel