ADVERTISEMENT

துபாயில் ‘Driver Experience Certificate’ ஐ வாங்குவது எப்படி? சர்வதேச லைசென்ஸ்க்கு விண்ணப்பிக்க இந்த சான்றிதழ் அவசியம்!!

Published: 12 Sep 2025, 8:47 PM |
Updated: 12 Sep 2025, 8:48 PM |
Posted By: Menaka

உங்களிடம் செல்லுபடியாகும் துபாய் டிரைவிங் லைசென்ஸ் இருந்து வெளிநாட்டில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டால், உங்கள் அமீரக ஓட்டுநர் வரலாறு இந்த விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்த உதவும். ஏனெனில், UK மற்றும் பல ஐரோப்பா நாடுகள் உட்பட பல நாடுகளில் உங்கள் ஓட்டுநர் பதிவின் ஆதாரத்தை சமர்ப்பிக்க நேரிடும். மேலும் துபாயில், இது ஓட்டுநர் அனுபவச் சான்றிதழ் (Driver Experience Certificate) வடிவத்தில் வருகிறது, இது  ‘To Whom It May Concern’ சான்றிதழ் என்றும் அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) வழங்கப்படும் இந்த ஆவணம், உங்கள் உரிமம் எப்போது வழங்கப்பட்டது மற்றும் நீங்கள் தற்போது பயிற்சியில் உள்ளீர்களா என்பது உட்பட எமிரேட்டில் உங்கள் ஓட்டுநர் வரலாற்றை உறுதிப்படுத்துகிறது. இது சர்வதேச உரிம விண்ணப்பங்கள், வேலைத் தேவைகள் மற்றும் காப்பீட்டு நோக்கங்களுக்காக கூட பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்ய சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாட்டில் அங்கீகரிக்கப்படுவதற்கு, அது முதலில் அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் (MOI) மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும், பின்னர் துபாயில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தால் (MOFA) முத்திரையிடப்பட வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பிக்கும் முன் சரிபார்க்க வேண்டிய விஷயங்கள்

  • நிலுவையில் உள்ள அனைத்து RTA அபராதங்களும் நிலுவைத் தொகைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
  • சான்றிதழானது துபாயில் வழங்கப்பட்ட போக்குவரத்து பதிவுகள் மற்றும் உரிம விவரங்களை மட்டுமே காண்பிக்கும்.

கட்டணம்

  • சேவை கட்டணம்: 100 திர்ஹம்ஸ்
  • அறிவு மற்றும் புதுமை கட்டணம் (Knowledge and innovation fees): 20 திர்ஹம்ஸ்

எப்படி விண்ணப்பிப்பது?

நீங்கள் பின்வரும் படிகளைப் பின்பற்றி முழுமையாக ஆன்லைனில் விண்ணப்பித்து மின்னஞ்சல் மூலம் சான்றிதழைப் பெறலாம்:

1. RTA வலைத்தளம் (rta.ae)

ADVERTISEMENT
  • எமிரேட்ஸ் ஐடி, ஓட்டுநர் உரிம விவரங்கள் அல்லது UAE PASS மூலம் உள்நுழையவும். அதில்
    ‘Driver Experience Certificate or To Whom It May Concern Certificate’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தி மின்னஞ்சல் மூலம் சான்றிதழைப் பெறுங்கள்.

2. RTA துபாய் டிரைவ் செயலி

  • துபாய் டிரைவ் செயலியைத் திறந்து, உங்கள் பயனர்பெயரைப் பயன்படுத்தி உள்நுழையவும் அல்லது கெஸ்ட் ஆக தொடரவும். அதில் ‘Driver Experience Certificate’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் ஓட்டுநர் உரிம விவரங்களைச் சரிபார்த்து சான்றிதழின் நோக்கத்தைத் தேர்வு செய்யவும்.
  • அபராதங்கள் மற்றும் தேவையான கட்டணங்களை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி,்சான்றிதழை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

பிற விருப்பங்கள்: Dubai Now செயலி, RTA சுய சேவை கியோஸ்க்குகள், அல்லது வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களில் (உம் ரமூல், தேரா, அல் பர்ஷா, அல் மனாரா, அல் த்வார், அல் கிஃபாஃப்), தஸ்ஜீல் மையங்கள், முஹைஸ்னா ஷாமில், தமாம் வாகன சோதனை மற்றும் வாஸ்ல் வாகன சோதனை (அல் ஜதாஃப்) ஆகியவற்றிலும் இந்த சான்றிதழை பெற நேரில் விண்ணப்பிக்கலாம்.

செல்லுபடியாகும் காலம்

வெளிநாடுகளுக்குச் செல்லும் துபாய் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு, இந்தச் சான்றிதழ் கட்டாய ஆவணமாகும். சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel