உலகளாவிய ஆட்சேர்ப்பு நிறுவனமான ராபர்ட் வால்டர்ஸின் புதிய ஆராய்ச்சியின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் கடல்சார் தொழில்துறை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளது. எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 83,000 திறமையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தத் துறை 2030 ஆம் ஆண்டுக்குள் தேசியப் பொருளாதாரத்தில் $7 பில்லியன் (Dh25.7 பில்லியன்) சேர்க்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது இன்றைய $4.79 பில்லியனில் இருந்து 46 சதவீத அதிகரிப்பாகும்.
ஆஃப்ஷோர் தொழில்துறை என்றால் என்ன?
கடல்சார் (offshore) தொழில்துறை என்பது கடற்கரைக்கு அப்பால் கடலில் நடத்தப்படும் செயல்பாடுகளைக் குறிக்கிறது, பொதுவாக எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, துளையிடுதல் மற்றும் கடல் உள்கட்டமைப்பு ஆகியவை இதில் அடங்கும். ஒரு முன்னணி எண்ணெய் உற்பத்தியாளராக, ஐக்கிய அரபு அமீரகம் பல தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பணியமர்த்தி பன்னாட்டு ஆஃப்ஷோர் நிறுவனங்களை நடத்தி வருகிறது. இப்போது, இந்தத் துறை வளங்களை பிரித்தெடுப்பதற்கு மட்டுமல்ல, மேம்பட்ட தொழில்நுட்ப சேவைகளுக்கும் ஒரு மையமாக உருவாகி வருகிறது.
இந்த கடல்சார் துறையின் வளர்ச்சி, வேலை உருவாக்கம், திறன் மேம்பாடு மற்றும் சேவை பல்வகைப்படுத்தலை இயக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்தின் மூலோபாய பகுதியாக மாறி வருவதை எடுத்துக்காட்டுகிறது என்று துறைசார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். கூடுதலாக, பின்வும் முக்கிய காரணிகளும் இந்த வளர்ச்சியை ஆதரிப்பதாகக் கூறப்படுகின்றது:
- ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் புவியியல் நிலை.
- ஆங்கிலப் புலமை மற்றும் பன்மொழித் திறமையின் உயர் நிலை.
- மேம்பட்ட கடல்சார் செயல்பாடுகளை ஆதரிக்கும் நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பு.
- புதுமை மற்றும் வணிக சேவைகளை ஊக்குவிக்கும் வலுவான அரசாங்க முயற்சிகள்.
இதன் விளைவாக, நிறுவனங்கள் இப்போது அமீரகத்தில் குறிப்பாக சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (machine learning) மற்றும் தயாரிப்பு பகுப்பாய்வு (product analysis) ஆகியவற்றில் திறமையான நிபுணர்களுக்கான வலுவான தேவை உள்ளதாகக் கூறப்படுகின்றது.
நௌக்ரிகல்ஃப் வெளியிட்ட தரவுகளின் படி, தொடக்க நிலை கட்டமைப்பு பொறியாளர் மாதத்திற்கு சுமார் 6,900 திர்ஹம்ஸ் வரை சம்பாதிக்கிறார், அதே நேரத்தில் 5–8 ஆண்டுகள் அனுபவம் உள்ள நடுத்தர அளவிலான வல்லுநர்கள் 10,700 திர்ஹம்ஸ் சம்பாதிக்கிறார்கள். 12–15 ஆண்டுகள் அனுபவம் உள்ள மூத்த பொறியாளர்கள் மாதத்திற்கு 18,200 திர்ஹம்ஸ் வரை சம்பளம் பெறுகிறார்கள்.
ராபர்ட் வால்டர்ஸின் அவுட்சோர்சிங்கின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் பர், உலகளாவிய நிறுவனங்கள் இப்போது ஆஃப்ஷோரிங் ஒரு திறமை அணுகல் உத்தியாகவே பார்க்கின்றன. “அமீரகம் மேம்பட்ட உள்கட்டமைப்பு, பன்மொழி பணியாளர்கள் மற்றும் ஆதரவான விதிமுறைகளின் அரிய கலவையை வழங்குகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்துப்படி, பல நிறுவனங்கள் வலுவான தொழில்நுட்ப நிபுணத்துவம், எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மற்றும் நீண்டகால திறமை தேவைப்படும் பகுதிகளில் ஆஃப்ஷோர் குழுக்களை தங்கள் செயல்பாடுகளில் முழுமையாக ஒருங்கிணைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel