அபுதாபியின் முசாஃபா தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இன்று (புதன்கிழமை) மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அபுதாபி காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு ஆணையம் உடனடியாக களத்தில் இறங்கி தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது, சிவில் பாதுகாப்புப் படையினர் தீயை அணைத்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை குளிர்வித்து புகையை வெளியேற்றும் மேலாண்மை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தப்பகுதியைத் தவிர்க்குமாறும் பொதுமக்களை அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
இதுவரை தீ விபத்தில் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்த சமீபத்திய தீ விபத்து பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளிவரும் அதே வேளையில், முசாஃபாவில் கடந்த காலங்களில் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இத்தகைய சூழலில், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத அறிக்கைகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் வகையில், புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel