ஷார்ஜாவின் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினரும் ஆட்சியாளருமான ஷேக் டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காசிமியின் அலுவலகம், நேற்று (செப்டம்பர் 22, திங்கட்கிழமை) ஷார்ஜாவின் அரச குடும்பத்தை சேர்ந்த ஷேக் சுல்தான் பின் காலித் பின் முகமது அல் காசிமி அவர்கள் காலமானதாக அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து மறைந்த ஷேக் சுல்தான் பின் காலித்திற்கான இறுதி தொழுகை இன்று காலை 10:00 மணிக்கு ஷார்ஜாவில் உள்ள கிங் பைசல் மசூதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழுகைக்குப் பிறகு அல் ஜுபைல் கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவின் அல் ருமைலா பகுதியில் உள்ள அமைந்துள்ள ஷேக் பைசல் பின் காலித் பின் முகம்மது அல் காசிமியின் மஜ்லிஸில் ஆண்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும்.
மேலும், ஷார்ஜாவில் மூன்று நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஷார்ஜா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel