அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் கல்வி மற்றும் அறிவுத் துறை (ADEK) மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பாதுகாப்பு, ஒழுக்கம் மற்றும் வசதியை மேம்படுத்துவதற்காக பள்ளிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்துக் கொள்கைகளை வெளியிட்டுள்ளது. நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது மாணவராக இருந்தாலும் சரி, இந்தப் போக்குவரத்துக் கொள்கையைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். அவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்:
பாதுகாப்பு முன்னுரிமை– பேருந்து பயணங்களின் போது மூன்றாம் தரப்பு ஆபரேட்டர்கள் இருந்தாலும் கூட மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளிகள் முழுப் பொறுப்பாகும். 11 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மேற்பார்வையாளர்கள் கட்டாயம், மேலும் பேருந்து ஊழியர்கள் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தால் (ITC) வழங்கப்பட்ட அனுமதிகளை வைத்திருக்க வேண்டும்.
இளைய மாணவர்ளுக்கான பிக்-அப் விதிகள் – 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் தனியாகப் பயணிக்க முடியாது. டிராப்-ஆஃப் புள்ளிகளில் பெற்றோர் அல்லது பெற்றோரால் நியமிக்கப்பட்ட நபர் இருக்க வேண்டும், இல்லையெனில் குழந்தை பள்ளிக்குத் திருப்பி அனுப்பப்படும். 15 வயதுக்கு மேற்பட்ட சகோதரர் அல்லது சகோதரி பெற்றோரின் கையொப்பமிடப்பட்ட ஒப்புதலுடன் மட்டுமே தனது இளைய சகோதரர்களை அழைத்துச் செல்லலாம். பெற்றோர்கள் கையொப்பமிடப்பட்ட ஒப்புதல் படிவத்தை பள்ளிக்கு வழங்கினால் மட்டுமே இது சாத்தியம்.
பள்ளி வழங்காத போக்குவரத்து – குறிப்பிட்ட மாணவர்கள் (9–12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்) சைக்கிள், ஸ்கூட்டர்கள் அல்லது பிற போக்குவரத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் பெற்றோர்கள் சம்மதப் படிவத்தில் கையொப்பமிட வேண்டும், ஏனெனில் பள்ளிப் பொறுப்பானது வளாகத்தில் மட்டுமே தொடங்குகிறது.
பயண வரம்புகள் மற்றும் நியமிக்கப்பட்ட நிறுத்தங்கள் – பள்ளிப் பேருந்து பயணங்கள் 60 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. மாணவர்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிகழ வேண்டும், மேலும் மேற்பார்வையாளர்கள் குறைந்த வயதுள்ள மாணவர்களுக்கு ஒரு பாதுகாவலரின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
பேருந்து பயன்பாடு மற்றும் கட்டணங்கள் மாணவர்கள் மட்டுமே பள்ளிப் பேருந்துகளைப் பயன்படுத்தலாம். பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்தால் சுற்றுலாப் பேருந்துகள் களப் பயணங்களுக்குப் (field trips) பயன்படுத்தப்படலாம்.
கட்டணங்கள்
பேருந்து கட்டணங்கள் ITC ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன, கட்டண அதிகரிப்புகளுக்கு சிறப்பு ஒப்புதல் தேவைப்படுகிறது.
பள்ளிகளில் போக்குவரத்து மேலாண்மை பள்ளிகள் கட்டமைக்கப்பட்ட போக்குவரத்துத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், நேர செயல்பாடுகளை நிர்வகிக்க பயிற்சி பெற்ற ஊழியர்களை நியமிக்க வேண்டும் மற்றும் பேருந்துகள் மற்றும் ஊழியர்களின் வாகனங்களுக்கு பிரத்யேக பார்க்கிங் வசதியை வழங்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் ஒழுக்கத்தை மட்டுமல்ல, அபுதாபி பள்ளிகள் முழுவதும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பெற்றோர்களை உள்ளடக்கிய போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel