விசிட் விசாக்களை ஸ்பான்சர் செய்வதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச சம்பளத் தேவைகள் அதிகளவு பார்வையாளர்களை ஈர்க்கும் என்று பயணத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் 29 அன்று, அடையாளம் மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP), தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஸ்பான்சர் செய்ய விரும்பும் அமீரக குடியிருப்பாளர்களுக்கான குறைந்தபட்ச வருமானத் தேவைகளை வெளியிட்டது. இந்த திருத்தப்பட்ட விதிகளின் படி, 4,000 திர்ஹம்ஸ் சம்பாதிக்கும் குடியிருப்பாளர்கள் முதல்-நிலை உறவினர்களுக்கு ஸ்பான்சர் செய்யலாம், 8,000 திர்ஹம்ஸ் சம்பாதிக்கும் குடியிருப்பாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை உறவினர்களுக்கு ஸ்பான்சர் செய்யலாம், அதே நேரத்தில் நண்பர்களுக்கு ஸ்பான்சர் செய்ய குறைந்தபட்சம் 15,000 திர்ஹம்ஸ் தேவை என்று அறிவிக்கப்பட்டது.
தொழில்துறை பங்குதாரர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றனர், இது வெளிப்படைத்தன்மை மற்றும் அணுகலை நோக்கிய ஒரு நேர்மறையான படியாகும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, தனிப்பட்ட ஸ்பான்சர்கள் பயண நிறுவனங்களை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, டைப்பிங் சென்டர்கள் மற்றும் அமர் மையங்கள் மூலம் நேரடியாக விண்ணப்பிப்பதன் மூலம் தங்கள் குடும்பங்களை அழைத்து வருவதற்கான வாய்ப்பை இந்த விதிகள் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, இது அதிகளவில் விண்ணப்பங்களை கொண்டுவரும் என்றும், தப்பியோடும் வழக்குகளைக் (absconding) குறைக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அனைவருக்கும் பயண முகவர் மூலம் விசா ஒப்புதல் கிடைக்காது. இப்போது குடியிருப்பாளர்கள் தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் நேரடியாக விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால் இது சாத்தியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விதிகள் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதையும், தனிநபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாய்ப்புகளை ஆராய்வதையும் எளிதாக்கும். எனவே, வேலைகள், முதலீடுகள் மற்றும் வணிகங்களை ஆராய மக்களை ஈர்க்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தக் கொள்கை இமிகிரேஷன் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, நீண்ட காலத்திற்கு தங்க விரும்புவோருக்கு இந்த விதிமுறைகள் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் நிலையான சூழலை வழங்குகிறது. வெளிப்படையான மேலும், விரிவான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தனிநபர்கள் விசா விதிமுறைகளை மீறுவதைத் தடுக்கும் மற்றும் சுற்றுலா மற்றும் வணிகத் துறைகள் இரண்டையும் ஆதரிக்கும் என்றும் விவரித்துள்ளனர்.
ஒட்டுமொத்தத்தில் புதிய விதிகள், மிகவும் நம்பகமான மற்றும் வெளிப்படையான விசா முறையை உருவாக்குவதன் மூலம் சுற்றுலா, வணிகம் மற்றும் நீண்டகால வதிவிடத்திற்கான உலகளாவிய மையமாக மாறுவதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்று தொழில் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel