ADVERTISEMENT

எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிகளவு ஆர்வம் காட்டும் அமீரக குடியிருப்பாளர்கள்.. புதிய ஆய்வில் தகவல்!!

Published: 5 Oct 2025, 9:28 AM |
Updated: 5 Oct 2025, 9:28 AM |
Posted By: Menaka

UAE குடியிருப்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களை (EV) தேர்வு செய்வதாகக் கூறப்படுகிறது. எரிபொருள் மூலம் இயங்கும் கார்களுடன் ஒப்பிடும்போது குறைந்த பராமரிப்பு செலவுகள் காரணமாக நாட்டில் உள்ள 52 சதவீதம் பேர் அவற்றை வாங்க அல்லது வாடகைக்கு எடுக்கத் தேர்வு செய்கிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களின் மேம்பட்ட தொழில்நுட்பமும் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

ரோலண்ட் பெர்கரின் ‘EV Charging Index 2025’ ஆய்வறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 24,000 பேட்டரி மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் யூனிட்கள் விற்பனையுடன், அமீரகம் GCC-யில் EV விற்பனை அளவில் முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா 11,000 யூனிட்களுக்கு மேல் விற்பனையைப் பதிவு செய்துள்ளது, இது 2023 உடன் ஒப்பிடும்போது பத்து மடங்கு அதிகரிப்பு என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

விற்பனையில் மட்டுமின்றி, சார்ஜிங் உள்கட்டமைப்பிலும் UAE முன்னணியில் உள்ளது. ஆகஸ்ட் 2025 நிலவரப்படி துபாயில் மட்டும் 1,270க்கும் மேற்பட்ட பொது சார்ஜிங் இடங்கள் உள்ளன. அக்டோபர் 1 ஆம் தேதி, துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (Dewa) எமிரேட் முழுவதும் உள்ள எரிபொருள் சில்லறை விற்பனையாளரின் சேவை நிலையங்களில் வேகமாக சார்ஜ் செய்யும் நிலையங்களை விரிவுபடுத்துவதற்காக ‘ Enoc Group’ உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரோலண்ட் பெர்கர் மத்திய கிழக்கின் கூட்டாளியும் வாகனத் துறைத் தலைவருமான அரவிந்த் சிஜே அவர்கள் பேசுகையில், “12 மாதங்களுக்கு முன்பு, இந்தப் பிராந்தியத்தின் நிலப்பரப்புக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் புதியதாக இருந்தாலும், பெருகிய முறையில் மாறும்’ என்று விவரிக்கப்பட்டது. இன்று, அதுபோல மாறியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “GCC நாடுகளில் சராசரி எலெக்ட்ரிக் வாகன விற்பனை விகிதம் 2024 ஆம் ஆண்டில் இரண்டு சதவீதத்திலிருந்து தோராயமாக நான்கு சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது, இது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன சந்தைகளில் ஒன்றாக பிராந்தியத்தை நிலைநிறுத்துகிறது.” என்றும் விவரித்துள்ளார்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, சார்ஜிங் உள்கட்டமைப்பில் அதிக வாடிக்கையாளர் திருப்தியையும் இந்த கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது, ஐக்கிய அரபு அமீரகம் 95 சதவீதத்துடன் தரவரிசையில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது, இது ஐரோப்பா (89 சதவீதம்) மற்றும் அமெரிக்கா (91 சதவீதம்) ஆகியவற்றை விட முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ஜிங் பழக்கத்தைப் பொறுத்தவரை பிராந்தியம் முழுவதும் வேறுபடுகிறது. சார்ஜிங்கில் சராசரியாக 50 சதவீதம் வீட்டிலேயே நிகழ்கிறது, தனியார் வீட்டு சார்ஜர் உரிமையில் சவுதி அரேபியா முன்னணியில் உள்ளது, அங்கு 62 சதவீத EV ஓட்டுநர்கள் தங்கள் சொந்த யூனிட்டைக் கொண்டுள்ளனர். அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகம் பகிரப்பட்ட அணுகலுக்கான மையமாக உருவெடுத்துள்ளது, ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களில் 33 சதவீதம் பேர் பகுதி -தனியார் அல்லது பகிரப்பட்ட சார்ஜர்களை நம்பியுள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது.

இதற்கிடையில், இந்தப் பிராந்தியத்தில் உள்ள எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களில் கிட்டத்தட்ட 91 சதவீதம் பேர் மற்றொரு மின்சார வாகனத்தை வாங்குவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர், இதில் ஐக்கிய அரபு அமீரகம் 94 சதவீதமாக உயர்ந்துள்ளது , இது சீனாவின் 99 சதவீதத்திற்கு அடுத்தபடியாக உள்ளது. இந்த ஆய்வில் வெளியான புள்ளிவிபரங்கள், GCC – ல் அதிகரித்து வரும் மின்சார வாகன பயன்பாடுகளை வெளிப்படுத்துகின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel