ADVERTISEMENT

UAE: இரண்டு நாட்களில் இரண்டு பாதசாரிகள் பலி!! சட்டவிரோதமாக சாலையைக் கடக்கும் போது ஏற்பட்ட விபரீதம்!!

Published: 10 Oct 2025, 6:53 PM |
Updated: 10 Oct 2025, 6:53 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் நடந்த வெவ்வேறு போக்குவரத்து விபத்துகளில் இரண்டு பாதசாரிகள் உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஷார்ஜா காவல்துறையின் கூற்றுப்படி, அவர்கள் சாலையில் குறிப்பிடப்படாத பகுதிகளிலிருந்து கடக்க முயன்ற போது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

முதல் விபத்து புதன்கிழமை வாசித் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்தது. இந்த சம்பவத்தில், 52 வயதுடைய பாகிஸ்தான் பெண் சாலை கடக்கும் போது விபத்துக்குள்ளானார். பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்துள்ளார். மேலும் விபத்த ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் விசாரணைக்காக காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஷார்ஜா தொழில்துறை பகுதி 10 இல் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடந்த இரண்டாவது விபத்தில், 31 வயது ஆப்கானிஸ்தான் ஆண் ஒரு பாதசாரிகளுக்கு குறிப்பிடப்படாத இடத்திலிருந்து சாலையைக் கடக்கும்போது வாகனம் மோதியதில் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கிலும் தொடர்புடைய வாகன ஓட்டி விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சட்டவிரோதமாக சாலையைக் கடப்பதால் ஏற்பட்ட தொடர் விபத்துகளைத் தொடர்ந்து, ஷார்ஜா காவல்துறை அனைத்து பாதசாரிகளையும் நியமிக்கப்பட்ட கிராஸிங்குகளைப் பயன்படுத்துமாறும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளது. சீரற்ற இடங்களிலிருந்து சாலையைக் கடப்பது பாதசாரிகள் மற்றும் ஓட்டுநர்கள் இருவரையும் கடுமையான ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று எச்சரித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT