ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற UAE லாட்டரி டிராவில் குடியிருப்பாளர் ஒருவருக்கு 100 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் பரிசு மூலம், நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய லாட்டரி பரிசை வென்ற ஒரே வெற்றியாளராகவும் மாறியுள்ளார்.
நேற்று (அக்டோபர் 18, சனிக்கிழமை) நடைபெற்ற ஒரு நேரடி டிராவில், வெற்றியாளர் தேவையான ஏழு எண்களையும் பொருத்தி முழு கிராண்ட் பரிசையும் தனிநபராக தட்டிச் சென்றுள்ளார். மேலும், வேறு எந்த வெற்றியாளர்களும் பகிர்ந்து கொள்ளாததால், ஜாக்பாட் பரிசுத் தொகையை ஒரே நபர் பெற்றுச் செல்வதாகக் கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் 2024 இல் தொடங்கப்பட்ட UAE லாட்டரி, ஒவ்வொரு சனிக்கிழமையும் நேரடி டிராக்களை நடத்துகிறது, இது எமிரேட்ஸ் முழுவதும் உள்ள பங்கேற்பாளர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் இருவார வாய்ப்பை வழங்குகிறது. இந்த வார இறுதியில், மிகவும் அதிர்ஷ்டசாலியான ஒரு பங்கேற்பாளருக்கு அந்தக் கனவு நனவாகியிருக்கிறது.
இந்த வார டிராவில் வெற்றி பெற்றவர்கள்
இந்த வார டிராவில் மொத்தம் 7,145 வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்:
- 3 வெற்றியாளர்கள் தலா 100,000 திர்ஹம் பரிசை பெற்றுக் கொண்டனர்.
- 67 வெற்றியாளர்கள் தலா 1,000 திர்ஹம்
- மேலும் 7 வெற்றியாளர்கள் லக்கி சான்ஸ் டிராவில் தலா 100,000 திர்ஹம் பெற்றனர் (லக்கி சான்ஸ் ஐடிகள்: CE5529701, BR4205618, AU1989749, DE8116103, AU1961863, CH5815807, BK3549063)
ஒவ்வொரு டிக்கெட்டின் விலையும் 50 திர்ஹம்ஸ் ஆகும்.
ஜாக்பாட் எவ்வாறு செயல்படுகிறது?
ஜாக்பாட் பரிசை வெல்ல, பங்கேற்பாளர்கள் டிக்கெட் எண்ணை பின்வருமாறு பொருத்த வேண்டும்:
- நாட்கள் தொகுப்பிலிருந்து அனைத்து 6 எண்களும் (எந்த வரிசையிலும்)
- மாதங்கள் தொகுப்பிலிருந்து 1 சரியான எண்
இந்த வார வெற்றி எண்கள்:
- நாட்கள் தொகுப்பு: 25, 18, 29, 11, 7, 10
- மாதங்கள் தொகுப்பு: 11
UAE லாட்டரி என்பது நாட்டின் முதல் அதிகாரப்பூர்வ மற்றும் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட லாட்டரி ஆகும், இது பொது வணிக கேமிங் ஒழுங்குமுறை ஆணையத்தின் (GCGRA) மேற்பார்வையின் கீழ், தி கேம் LLC (The Game LLC) ஆல் இயக்கப்படுகிறது
அதுமட்டுமின்றி, வெற்றியாளர்கள் தங்கள் பரிசுகளை வரி இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம், மேலும் இது போன்ற பெரிய ஜாக்பாட்கள் சரிபார்ப்புக்குப் பிறகு 30 நாட்களுக்குள் செலுத்தப்படும். இந்த டிராவில் சேர, பங்கேற்பாளர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட UAE குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel