ADVERTISEMENT

மூன்று மாதங்களில் 5.1 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வரவேற்ற ஷார்ஜா ஏர்போர்ட்..!!

Published: 23 Oct 2025, 9:29 PM |
Updated: 23 Oct 2025, 9:29 PM |
Posted By: Menaka

ஷார்ஜா ஏர்போர்ட் 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சுமார் 5,127,120 பயணிகளை வரவேற்று வலுவான செயல்பாட்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது 4.39 மில்லியன் பயணிகளைக் கண்ட 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 16.7% அதிகரிப்பு என்றும் கூறப்படுகிறது..

ADVERTISEMENT

இத்தகைய பயணிகள் போக்குவரத்தின் அதிகரிப்பு, உள்ளூர் மற்றும் சர்வதேச வழித்தடங்களுக்கு சேவை செய்யும் பிராந்தியத்தில் ஒரு முக்கிய மையமாக விமான நிலையத்தின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

நடப்பு ஆண்டின் விமானச் செயல்பாட்டைப் பொறுத்தவரை, விமான நிலையம் திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடப்படாத விமானங்கள் உட்பட 30,737 விமான இயக்கங்களை பதிவு செய்தது, இது முந்தைய ஆண்டின் 3 ஆம் காலாண்டில் பதிவான 27,758 விமானங்களை விட 10.7% அதிகம் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

ADVERTISEMENT

இதற்கிடையில், சரக்கு நடவடிக்கைகளும் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. சமீபத்திய தரவுகளின் படி, விமான நிலையம் 48,073 டன் சரக்குகளை கையாண்டது, இது கடந்த ஆண்டு 46,284 டன் உடன் ஒப்பிடும்போது 3.9% அதிகரிப்பைக் குறிக்கிறது. இதேபோல், கடல்-வான் சரக்குப்(sea-air freight) பிரிவு ஒரு சிறப்பான செயல்திறனைக் காட்டியுள்ளது, இது 3,236 டன்னிலிருந்து 4,296 டன்னாக அதிகரித்து 32.8% உயர்வைக் கண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஷார்ஜா ஏர்போர்ட் ஆணையத்தின் (SAA) தலைவர் அலி சலீம் அல் மிட்ஃபா அவர்கள் பேசிய போது, உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடுகள் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றில் விமான நிலையத்தின் தொடர்ச்சியான முதலீடுகள்இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், தொடர்ந்து பேசுகையில், “விமான நிலையத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டு வளர்ச்சியையும், ஷார்ஜாவின் நீண்டகால மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஏற்ப விமானப் போக்குவரத்துத் துறையை ஆதரிப்பதில் அதன் முக்கிய பங்கையும் இந்த முடிவுகள் பிரதிபலிக்கின்றன” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து, ஷார்ஜா ஏர்போர்ட் இணைப்பை விரிவுபடுத்துதல், சரக்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஸ்மார்ட் மற்றும் திறமையான டிஜிட்டல் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துதல் போன்ற அதன் மூலோபாய இலக்குகளுக்கு உறுதிபூண்டுள்ளது என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel