துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நிறுவப்பட்டு வெற்றிகரமாக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நகரம் முழுவதும் சிறப்பு சலுகைகள், பரிசுகள் மற்றும் வேடிக்கையான செயல்பாடுகளை வழங்குவதன் மூலம் 20வது ஆண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறது.
நீங்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தாலும், மெட்ரோவில் ஏறினாலும், அல்லது டிராமில் சென்றாலும், கொண்டாட்டங்களில் அனைவரும் சேர RTA ஏதாவது ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக சினிமா டிக்கெட்டுகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங்கில் தள்ளுபடிகளையும் குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் டிராம் (அக்டோபர் 22 – நவம்பர் 2):
அடிக்கடி டிராமில் பயணிப்பவர்கள் உணவகங்கள், செயல்பாடுகள் மற்றும் பலவற்றில் 10,000க்கும் மேற்பட்ட சலுகைகள் நிரம்பிய ‘Entertainer UAE 2026’ என்ற சிறு புத்தகத்தை வெல்லும் வாய்ப்பு உள்ளது.
துபாய் விமான நிலையம் (அக்டோபர் 28 – நவம்பர் 1):
DXBக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் RTAவின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் புகைப்பட சவாலில் (photo challenge) சேரலாம். பங்கேற்பாளர்கள் வரவேற்பு பரிசை பெறுவார்கள் மற்றும் RTAவின் சமூக ஊடகப் பக்கங்களில் இடம்பெறும் வாய்ப்பைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ நிலையங்களில் பரிசுகள் (நவம்பர் 1–15):
புர்ஜுமான், யூனியன் மற்றும் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மெட்ரோ நிலையங்களில் உள்ள ENBD கியோஸ்க்குகளுக்குச் சென்று பரிசுகளைப் பெறலாம் மற்றும் Go4it கார்டை பற்றி அறிந்து கொள்ளலாம்.
RTA பேருந்துகளிலும் பரிசுகள்
அல் குபைபா பஸ் நிலையம் மற்றும் இன்சூரன்ஸ் மார்க்கெட் மெட்ரோ நிலையத்தில், பயணிகள் RTA20 பூத்தில் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்யலாம். 20 வினாடிகளில் ஒரு பரிசைப் பெற்று எலெக்ட்ரானிக்ஸ் முதல் சாக்லேட்டுகள் வரை எதையும் வெல்லலாம். இந்தச் சலுகை நவம்பர் 1 அன்று ஒரு நாளுக்கு மட்டுமே கிடைக்கும்.
ஜெயண்ட் போட்டோபூத்கள் (Giant photobooths) (நவம்பர் 1, காலை 9–மாலை 5 மணி):
புர்ஜுமான் மெட்ரோ நிலையத்திற்கு சென்று RTAவின் சிறப்பு பிரேம்களுக்கு (giant art frame) உள்ளே போஸ் கொடுக்கலாம். கொண்டாட்டத்தின் நினைவாக உங்கள் டிஜிட்டல் போட்டோநகலை பெற்றுக்கொள்ளலாம்.
சிறப்பு நிகழ்ச்சிகள் (நவம்பர் 1):
பின்வரும் இடங்களில் ‘Balloons and Smiles’ நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்:
- புர்ஜுமான் மெட்ரோ நிலையம் (காலை 9)
- ஆன்பாசிவ் மெட்ரோ நிலையம் மற்றும் சோபா ரியாலிட்டி டிராம் நிலையம் (காலை 10)
- இன்சூரன்ஸ் மார்க்கெட் மெட்ரோ நிலையம் மற்றும் உம் ரமூல் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம் (காலை 11)
தள்ளுபடி சலுகைகள்:
- ராக்ஸி சினிமாஸில் (நவம்பர் 1–5) RTA20 என்ற ப்ரோமோஷன் குறியீட்டைப் பயன்படுத்தி சினிமா டிக்கெட்டுகளில் 20 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். அதே காலத்திற்கு அதே ப்ரோமோஷன் குறியீட்டைக் கொண்ட noon ஆர்டர்களில் 20 சதவீத தள்ளுபடியையும் பெறலாம்.
மேற்கூறியவையுடன் நவம்பர் 1-30 வரை அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் RTA வரையறுக்கப்பட்ட பதிப்பு (limited edition) நோல் அட்டைகளை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel