ADVERTISEMENT

சவுதி அரேபியா : நாளை முதல் பேருந்து உட்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தம்..!!!

Published: 20 Mar 2020, 1:00 PM |
Updated: 20 Mar 2020, 1:05 PM |
Posted By: admin

வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா கொரோனா
வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் பட்சத்தில், தற்பொழுது அந்நாட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குள்ள அனைத்து உள்நாட்டு விமானங்கள், பேருந்துகள், டாக்ஸிகள் மற்றும் ரயில்களை 14 நாட்களுக்கு சவுதி அரேபியா நிறுத்தி வைக்கும் என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நடைமுறையானது நாளை சனிக்கிழமை (21.03.2020) முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சவுதி அரேபியாவில் இதுவரை 274 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் எட்டு பேர் வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.