ADVERTISEMENT

சேப்பாக்கம் மைதானத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி – ரசிகர்கள் கரகோஷம்!!

Published: 3 Mar 2020, 4:28 AM |
Updated: 3 Mar 2020, 4:00 PM |
Posted By: admin

இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அவர் மைதானத்தில் களமிறங்கினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டும். தற்பொழுது அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடி பல மாதங்கள் ஆகிவிட்டன என்றாலும் ரசிகர்கள் அவரை கொண்டாடாத நாளே இல்லை எனலாம்.

ADVERTISEMENT

சர்வதேச போட்டிகளில் விளையாடாத தோனி, தற்பொழுது IPL தொடரில் சென்னை அணிக்காக களமிறங்க உள்ளார். மார்ச் 29 ம் த்தி ஆரம்பிக்கவுள்ள 13 வது IPL தொடரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். தோனியின் ரசிகர்கள் இவரின் ஆட்டத்தைக் காண பெரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், தொடரின் பயிற்சிக்காக தோனி தற்பொழுது சென்னை வந்துள்ளார். அவர் சேப்பாக்கம் மைதானம் வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் அனைவரும் அங்கு கூடிவிட்டனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி நேற்று மைதானம் வந்த தோனி தன் தொடரிற்கான பயிற்சியில் இறங்கினார். அப்பொழுது ரசிகர்கள் அனைவரும் அவரின் பெயரை உரக்கக் கூறி கரகோஷம் எழுப்பினார்கள்.

ADVERTISEMENT

இதனையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ்,தன் ட்விட்டர் பக்கத்தில் தோனி மைதானத்தில் வந்து பயிற்சி எடுக்க ஆயத்தமாகும் விடியோவை வெளியிட்டது. தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ ட்ரெண்ட் ஆகிக் கொண்டு வருகிறது.

ADVERTISEMENT