ADVERTISEMENT

UAE CORONA UPDATE : புதிதாக 53 பேருக்கு பாதிப்பு..!!! ஒருவர் பலி..!!!

Published: 31 Mar 2020, 1:56 PM |
Updated: 31 Mar 2020, 1:56 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இன்று மட்டும் கொரோனா வைரஸிற்கு அமீரகத்தில் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 664 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் புதிதாக ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 67 வயதான ஆசியாவை சேர்ந்த நபர் தற்பொழுது கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இவருக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தமான பிரச்சனைகள் இருந்துள்ள நிலையில், தற்பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT