ADVERTISEMENT

அமீரகத்தில் கொரோனாவிற்கு மேலும் இருவர் பலி..!!! பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 611 ஆக உயர்வு..!!!

Published: 30 Mar 2020, 1:57 PM |
Updated: 30 Mar 2020, 2:03 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் திங்களன்று (இன்று) புதிதாக 41 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் மூலமாக 36 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் இரண்டு பேர் தற்பொழுது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் 48 வயதான அரபு நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் ஏற்கெனவே இதய நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். மற்றொருவர் 42 வயதான ஆசியாவை சேர்ந்த பெண்மணியாவார். இவருக்கும் இதய நோய் சம்பந்த பாதிப்புகள் ஏற்கெனவே இருந்துள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருக்கிறது.

ADVERTISEMENT

ஏற்கெனவே கொரோனா பாதித்தவர்களில் 3 பேர் தற்பொழுது முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.