ADVERTISEMENT

UAE கொரோனா அப்டேட் (ஏப்ரல் 2, 2020) : பாதிக்கப்பட்டோர் 210 பேர்..!!! மொத்த எண்ணிக்கை 1,024 பேர்..!!!

Published: 2 Apr 2020, 7:17 PM |
Updated: 2 Apr 2020, 7:20 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 2,2020) புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,024 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் அனைவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் சிலர் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இன்றைய நாளில் மட்டும் 35 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 96 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

நேற்று மட்டும் ஒரேநாளில் 150 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.