ADVERTISEMENT

சவூதி அரேபியா : சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு கட்டணமின்றி மூன்று மாதங்கள் விசா நீட்டிப்பு..!!

Published: 27 May 2020, 7:07 AM |
Updated: 27 May 2020, 7:07 AM |
Posted By: admin

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையின் காரணமாக, தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் சவூதி அரேபியாவில் வசிக்கும் காலாவதியான சுற்றுலா விசாக்களை வைத்திருப்பவர்களின் விசாவானது தானாகவே மேலும் மூன்று மாதங்களுக்கு கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக நீட்டிக்கப்படும் என்று சவூதி அரேபியாவின் பாஸ்போர்ட் பொது இயக்குனரகம் (General Directorate of Passports,Jawazat) அந்நாட்டின் செய்தி நிறுவனம் (SPA) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தேசிய தகவல் மையத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் இந்த நடவடிக்கை, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொருளாதார தாக்கத்தை தணிக்க சவுதி அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசா நீட்டிப்பானது தானாகவே கணினி மூலம் செய்யப்படுவதாகவும், இதற்காக சம்பந்தப்பட்ட இயக்குநரக அலுவலகங்களுக்கு பயனாளிகள் செல்ல தேவையில்லை என்றும் பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT