ADVERTISEMENT

துபாய்: நாளை முதல் அனைத்து வயதினரும் ஷாப்பிங் மால் உள்ளிட்ட வணிக வளாகங்களுக்கு செல்லலாம்..!! சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் மீதான தடை நீக்கம்..!!

Published: 17 Jun 2020, 5:48 PM |
Updated: 17 Jun 2020, 5:58 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்புகளால் விதிக்கப்பட்டிருந்த தடைகள் சிறிது சிறிதாக தளர்த்தபட்டுவரும் நிலையில், துபாயில் மட்டும் கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகளை நீக்கி துபாய் அரசு உத்தரவு பிறப்பித்து வருகிறது.

ADVERTISEMENT

அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100 சதவீத அளவில் செயல்படுவது, அனைத்து பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் திறக்கப்பட்டது, சுற்றுலா தலங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது மற்றும் ஷாப்பிங் மால்கள் 100 சதவீதம் செயல்பட அனுமதித்தது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது துபாய் நகரம் மட்டும் வழக்கமான சூழ்நிலையில் இயங்கி வருகிறது.

இவ்வாறான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்துடையவர்கள் என்று அறியப்படும் 12 வயதிற்கு குறைவான சிறியவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு தொடர்ந்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், நாளை ஜூன் 18 ஆம் தேதி முதல், 12 வயதிற்கு குறைவான சிறியவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களும், கொரோனாவிற்க்கான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லலாம் என துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்ச குழு இன்று அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த சில குறிப்பிட்ட செயல்பாடுகள் நாளை முதல் மீண்டும் தொடங்கலாம் எனவும் உச்ச குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT