ADVERTISEMENT

இந்தியா : சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஆகஸ்ட் 31 ம் தேதி வரையிலும் தடை நீட்டிப்பு..!!

Published: 31 Jul 2020, 2:18 PM |
Updated: 31 Jul 2020, 2:19 PM |
Posted By: admin

இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இன்றுடன் முடிவடையவிருக்கும் நிலையில், தற்பொழுது ஆகஸ்ட் 31 ம் தேதி வரை விமானப்போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு சிறப்பு விமான சேவைகளை இயக்கும் என்றும் வரும் நாட்களில் கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கும் சிறப்பு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு தற்பொழுது ஆகஸ்ட் மாதம் இறுதி வரையிலும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT