ADVERTISEMENT

ஓமான் : இந்தியா செல்ல விரும்பும் பயணிகளுக்கான படிவம் வெளியீடு..!! ஆகஸ்ட் 2 முதல் ஏர் இந்தியா அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தகவல்..!!

Published: 31 Jul 2020, 4:27 PM |
Updated: 31 Jul 2020, 4:28 PM |
Posted By: admin

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் திருப்பி அனுப்பும் நடவடிக்கையான வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தில் ஓமானில் இருந்து இந்தியாவிற்கு செல்லவிருக்கும் விமானங்களில் பயணிக்க விரும்புபவர்கள் ஓமானில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவித்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

விண்ணப்ப படிவம்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfpwP7Oe0nbebY8EtuPPNxXP2HLiViaXv-fghgXhBld3dOZyA/viewform

ADVERTISEMENT

விண்ணப்பித்தவர்களில் விமானங்களில் பயணிக்க தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், டிக்கெட் முன்பதிவிற்காக ஏர் இந்தியா விமான நிறுவனம் அவர்களை தொடர்பு கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படிவத்தை சமர்ப்பித்தவர்கள் நேரடியாக ஓமானில் உள்ள ரூவி (Ruwi) மற்றும் வட்டாயா (Wattaya) போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய ஏர் இந்தியா அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 2 ம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு செல்லும் விமானங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கர்ப்பிணி பெண்கள், வயது முதிர்ந்தோர், அவசர தேவையுடையவர்கள் போன்றவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஓமானில் இருந்து இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15 வரை இயக்கப்படும் விமானங்களில் இரு விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்திருந்தது. இரு விமானங்களில் ஒன்று ஆகஸ்ட் 10 ம் தேதி திருச்சிக்கும் மற்றொன்று ஆகஸ்ட் 11 ம் தேதி சென்னைக்கும் இயக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT