ADVERTISEMENT

அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு மேலும் இரு விமானங்கள் கூடுதலாக இணைப்பு..!! இன்று பிற்பகல் 2 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கும்..!!

Published: 6 Aug 2020, 8:52 AM |
Updated: 6 Aug 2020, 8:56 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு ஆகஸ்ட் 31 ம் தேதி வரையிலும் இயக்கப்படவிருக்கும் வந்தே பாரத்தின் ஐந்தாம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் தற்போது கூடுதலாக 9 விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கும் இந்த 9 விமானங்களில் 2 விமானங்கள் தமிழகத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு விமானம் கோயம்புத்தூருக்கும் மற்றொரு விமானம் மதுரைக்கும் இயக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் செல்லும் இந்த இரு விமானங்களும் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திலிருந்து செல்ல இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள விமானங்கள் கோயம்புத்தூர், மதுரை தவிர கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, ஹைதராபாத், லக்னோ ஆகிய நகரங்களுக்கு செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT