ADVERTISEMENT

வந்தே பாரத் Phase 6 செப்டம்பர் 1 முதல் தொடக்கம்..!! ஏர் இந்தியா அறிவிப்பு..!!

Published: 19 Aug 2020, 3:24 PM |
Updated: 23 Aug 2020, 4:20 PM |
Posted By: admin

வெளிநாட்டில் சிக்கித்தவித்த இந்திய குடிமக்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டம் இம்மாதம் இறுதியுடன் முடியவிருக்கும் நிலையில், தற்போது இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் 1 ம் தேதி முதல் வந்தே பாரத்தின் ஆறாம் கட்டம் தொடங்க இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து தற்போது வரையிலும் சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் இருக்கும் இந்த தடையானது ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் முடிவடையும் என வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் ஆறாம் கட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் சர்வதே விமான போக்குவரத்தின் மீதான தடை செப்டம்பர் இறுதி வரையிலும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 1 முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் ஆறாம் கட்டத்தில், இந்தியாவுடன் ஏர் பபுல் (Air Bubble) ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான விமான சேவைகள் தொடரும் எனவும் ஏர் இந்தியா அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT