ADVERTISEMENT

இந்தியா, அமீரகம் இடையே செப்டம்பர் மாதம் இயக்கப்படவுள்ள விமானங்களின் டிக்கெட் புக்கிங் நாளை துவக்கம்..!! தூதரகம் அறிவிப்பு..!!

Published: 26 Aug 2020, 2:52 PM |
Updated: 26 Aug 2020, 2:58 PM |
Posted By: admin

வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்டத்திற்கான விமானங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்பொழுது 6 ம் கட்டத்தில் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படவிருக்கும் விமானங்களுக்கான முன்பதிவை செய்துகொள்ளலாம் என பயணிகளுக்கு அமீரகத்தில் இருக்கக்கூடிய இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அனுப்பும் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கையானது தற்பொழுது இயங்கி வரும் பட்சத்தில், வரும் ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் இந்த கட்டம் முடிவடைவதாகவும் வரும் செப்டம்பர் மாதம் 1 ம் தேதி முதல் 31 ம் தேதி வரையிலும் ஆறாம் கட்டடத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படும் எனவும் ஏற்கெனவே இந்திய அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அடுத்த மாதத்தில் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு செல்லவிருக்கும் விமானங்களுக்கான முன்பதிவினை நாளை காலை 10 மணி (UAE time) முதல் புக்கிங் செய்து கொள்ளலாம் என தூதரகம் அறிவித்துள்ளது. அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு செப்டம்பர் மாதம் இயக்கப்படும் விமானங்களில் 37 விமானங்கள் தமிழகத்திற்கு செல்லவிருக்கின்றன.

ADVERTISEMENT

இதில் 19 விமானங்கள் திருச்சிக்கு 10 விமானங்கள் மதுரைக்கும் 8 விமானங்கள் சென்னைக்கும் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவிற்கு செல்ல வேண்டி தூதரகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்திய அரசு செயல்படுத்தி வரும் வந்தே பாரத் விமானங்களின் பயணிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VBM: 6-ம் கட்டத்தில் அமீரகத்திலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..!!

ADVERTISEMENT

அதே போல், இந்தியாவில் இருந்து அமீரகம் திரும்ப விரும்புபவர்களும் அடுத்த மாதம் இயக்கப்படும் விமானங்களுக்கான முன்பதிவினை நாளை காலை முதல் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான முன்பதிவின் போது பயணிகளின் பாஸ்போர்ட் விபரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கண்டிப்பாக தேவை என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.