ADVERTISEMENT

UAE : செல்லுபடியாகும் அனைத்து விசாக்களின் மூலமும் அமீரகம் வர இந்தியா அனுமதி..!! இந்திய தூதர் அறிவிப்பு..!!

Published: 10 Aug 2020, 4:33 PM |
Updated: 10 Aug 2020, 4:34 PM |
Posted By: admin

இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே சிறப்பு விமான சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரையிலும் இந்தியாவில் இருந்து செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே அமீரகத்திற்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது செல்லுபடியாகும் அனைத்து வகையான விசாக்களை வைத்திருப்பவர்களும் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு பயணிக்கலாம் என்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர் இன்று (திங்கள்கிழமை) அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து பவன் கபூர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மாலை இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இது குறித்து வெளியிட்டிருந்த அறிவிப்பைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்த அறிவிப்பின்படி, இந்திய மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான விமான நிறுவனங்கள், அமீரகத்தின் எந்தவொரு செல்லுபடியாகும் விசா வைத்திருப்பவர்களையும் தங்களது விமானங்களில் ஏற்றிச்செல்ல முடியும்” என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புதிய விசாக்களின் மூலம் வர முடியாமல் தவித்தவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ADVERTISEMENT