ADVERTISEMENT

ஆகஸ்ட் 18 முதல் 31 வரை குவைத்தில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..!!

Published: 17 Aug 2020, 11:58 AM |
Updated: 17 Aug 2020, 12:01 PM |
Posted By: admin

வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் குவைத்தில் இருந்து நாளை ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான நாட்களில் இந்தியாவிற்கு இயக்கப்படவிருக்கும் விமானங்களின் பட்டியலை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. தூதரகம் வெளியிட்டுள்ள அட்டவணையில் இந்தியாவிற்கு மொத்தம் 81 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாகவும் அதில் 13 விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட அனைத்து விமானங்களும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கே இயக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருப்பி அனுப்பும் விமானங்களில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் விபரங்கள்

ADVERTISEMENT