ADVERTISEMENT

மதுரை, துபாய் இடையே மீண்டும் தொடங்கிய “தினசரி ஸ்பைஸ்ஜெட் விமான சேவை”..!! கட்டணம் மிக குறைவு..!! புக்கிங் தொடக்கம்..!!

Published: 28 Aug 2020, 9:50 AM |
Updated: 28 Aug 2020, 8:04 PM |
Posted By: admin

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து மதுரைக்கும் துபாய்க்கும் இடையே தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த தினசரி சர்வதேச விமான சேவை, வரும் செப்டம்பர் மாதம் 10 ம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த விமானங்களுக்கான டிக்கெட் புக்கிங் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், துபாய் செல்லும் பயணிகள் தங்களின் டிக்கெட்டினை ஆன்லைன் வாயிலாகவோ (https://book.spicejet.com) அலலது பயண முகவர்கள் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது

இந்தியாவிலிலிருந்து தற்போது அமீரகத்திற்கு ஏர் பபுள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முழுவதும், வந்தே பாரத்தின் 6 ம் கட்ட நடவடிக்கையாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மதுரை விமான நிலையத்திற்கும் துபாய் விமான நிலையத்திற்கும் இடையே தினசரி விமான சேவையை வழங்கி வந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டும் தனது சேவையை தொடங்குவதாக அறிவித்திருப்பது தென் தமிழகத்தை சார்ந்த பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ADVERTISEMENT

செப்டம்பர் 10 ம் தேதியிலிருந்து மதுரையிலிருந்து மீண்டும் தனது சேவையை துவங்கவுள்ள இந்த விமானங்களுக்கான டிக்கெட் கட்டணம் 8500 ரூபாயிலிருந்தும், துபாயிலிருந்து மதுரை செல்லும் விமானத்திற்கான கட்டணம் 420 திர்ஹம்சிலிருந்தும் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்திய அரசாங்கம் மற்றும் அமீரக அரசாங்கம் அறிவித்துள்ள பயண விதிமுறைகளின் கீழ் மட்டுமே இந்த விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படும் எனவும், பயணம் மேற்கொள்ள தேவையான ICA / GDRFA ஒப்புதல், COVID-19 நெகடிவ் ரிசல்ட் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT