ADVERTISEMENT

ஆகஸ்ட் 8 லிருந்து இந்தியா பயணம் செய்யவிருப்பவர்கள் கவனத்திற்கு.. புதிய வழிமுறைகள் வெளியிட்ட MoHFW.. 7 நாள் கட்டண தனிமைப்படுத்தலிலும் விலக்கு..

Published: 2 Aug 2020, 2:32 PM |
Updated: 2 Aug 2020, 5:22 PM |
Posted By: admin

வெளிநாடுகளில் இருந்து தற்போது திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் கீழ் இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா செல்லும் பயணிகளுக்கான திருத்தம் செய்யப்பட்ட புதிய வழிமுறைகளை இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் (Ministry of Health & Family Welfare – MoHFW) இன்று வெளியிட்டுள்ளது. மேலும் இந்த புதிய வழிகாட்டுதல்கள் வரும் ஆகஸ்ட் 8 ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், அது வரையிலும் பழைய வழிகாட்டுதல்களே பின்பற்றப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சுகாதார அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்கள் படி, வெளிநாடுகளிலிருந்து இந்தியா செல்லும் பயணிகள், பயணத்திற்கு முன்பு சுய அறிவிப்பு படிவத்தை (Self Declaration Form) ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் எனவும், மேலும் கொரோனாவிற்கான சோதனை முடிவில் பெறப்படும் நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் வைத்திருப்பவர்கள் கட்டாய ஏழு நாள் கட்டண தனிமைப்படுத்தலில் (7 Days Institutional Quarantine) இருந்து விலக்கு கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்துவர இயக்கப்படும் ஏர் இந்தியா விமான நிறுவனமும் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 8 ம் தேதியிலிருந்து பயணம் செய்பவர்கள் பின்பற்றப்பட வேண்டிய புதிய வழிகாட்டுதல்கள்..

> இந்தியாவிற்கு பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் சுய அறிவிப்பு படிவத்தை பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே www.newdelhiairport.in என்ற ஆன்லைன் போர்ட்டலில் சமர்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

> பயணம் மேற்கொள்ளும் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுவோம் என்று மேலே குறிப்பிட்டுள்ள ஆன்லைன் போர்ட்டலில் ஒரு உறுதிமொழியையும் கொடுக்க வேண்டும் (ஏழு நாட்கள் தங்கள் சொந்த செலவில் நிறுவன தனிமைப்படுத்தல் மற்றும் அதன்பின்னர் வீட்டில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தல்)

> 14 நாட்கள் முழுவதும் வீட்டு தனிமைப்படுத்தலானது கர்ப்பம், குடும்பத்தில் ஏற்பட்ட மரணம், கடுமையான நோய் மற்றும் 10 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர் போன்ற காரணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படலாம். அவ்வாறு பயணிப்பவர்கள் தாங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன் குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்பே ஆன்லைன் போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் போர்ட்டலில் தொடர்பு கொள்வதால் அரசாங்கம் எடுக்கும் முடிவே இறுதியானது.

ADVERTISEMENT

> பயணம் செய்பவர்கள் இந்தியா வந்தடைந்தவுடன் பயணம் புறப்படுவதற்கு முன்பாக பெறப்பட்ட நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் சான்றிதழை சமர்பிப்பதன் மூலம், 7 நாட்கள் கட்டண தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறலாம். அவ்வாறு பெறப்பட்ட நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட், விமானம் ஏறுவதற்கு குறைந்தது 96 மணி நேரத்திற்குள்ளாக இருக்க வேண்டும். மேலும் நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் மேலே கூறப்பட்டுள்ள ஆன்லைன் போரட்டலில் சமர்ப்பிக்க வேண்டும்.

    • ஒவ்வொரு பயணியும் கொரோனா சோதனை அறிக்கை முடிவின் நம்பகத்தன்மை குறித்து ஒரு அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும். சோதனை முடிவின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாவிட்டால் குற்றவியல் வழக்கை சந்திக்க நேரிடும்.
    • ஆன்லைன் போர்ட்டலில் சமர்ப்பித்த கொரோனாவிற்கான நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட்டை வருகை தரும் விமான நிலையங்களுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் பயணிகள் வருகையின் மதிப்பீட்டின் படி, தனிமைப்படுத்துதல் (Quarantine & Isolation) தொடர்பாக மாநிலங்கள் தங்கள் சொந்த நெறிமுறையை உருவாக்க முடியும் என்றும் இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.