ADVERTISEMENT

UAE: அபுதாபிக்குள் நுழைய புதிய நடைமுறைகள் அறிவிப்பு..!! ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும் என தகவல்..!!

Published: 26 Aug 2020, 3:55 AM |
Updated: 26 Aug 2020, 4:08 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசு அதிகாரிகள் தொற்றுநோய் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து அபுதாபி அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு குழுவானது அபுதாபி சுகாதாரத் துறையின் ஒத்துழைப்புடன் நாளை (வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27) முதல் அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைய விரும்பும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய புதிய நெறிமுறையை வெளியிட்டுள்ளது.

தற்பொழுது வரையிலும் கொரோனாவிற்கான நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் வைத்திருப்பவர்கள் அல்லது துபாய், அபுதாபி எல்லையில் அமைந்திருக்கும் DPI லேசர் சோதனை மையத்தில் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட்டை பெற்றவர்கள் அபுதாபிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் புதிய நடைமுறை குறித்து அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்ட செய்தியில், “48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் PCR சோதனை முடிவை வைத்திருப்பவர்கள் அல்லது ஆறு நாட்களுக்குள் பெறப்பட்ட நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட்டுடன் சேர்த்து நெகடிவ் DPI லேசர் டெஸ்ட் ரிசல்ட்டை பெற்றவர்கள் மட்டுமே அபுதாபிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

இருப்பினும், கோவிட் -19 மருத்துவ தடுப்பூசி சோதனைகளுக்காக பங்கேற்கும் தன்னார்வலர்கள் இந்த நுழைவு நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் தங்களின் பயணத்திற்கு அவசர வாகன பாதைகளைப் (Emergency Vehicle Lane) பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

அபுதாபி அரசு வெளியிட்டிருக்கும் இந்த நடைமுறைகளை மீறும் எவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் இருக்கக்கூடிய 50 திர்ஹம் DPI சோதனை மையங்கள்
  • சையத் ஸ்போர்ட்ஸ் சிட்டி
  • கார்னிச் (சனி முதல் வியாழன் வரை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை)
  • கந்தூத்தில் உள்ள லேசர் ஸ்கிரீனிங் மையம் (24×7)
  • அல் அய்ன் – அல் ஹிலி திருமண மண்டபம் (வாரத்தில் ஏழு நாட்கள் காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை)
  • அல் ஹிலி
  • துபாய் – மினா ரஷீத் மற்றும் அல் கவானீஜ்
  • ஷார்ஜா கோல்ஃப் மற்றும் ஷூட்டிங் கிளப்
  • ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா (வாரத்தில் ஏழு நாட்களும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை)
  • அஜ்மானில் இருக்கும் எமிரேட்ஸ் ஹாஸ்பிடலிட்டி சென்டர் (24×7).