ADVERTISEMENT

UAE : அரபுலகில் முதன் முறையாக தனியார் துறை ஊழியர்களுக்கு 5 நாள் “Paternity” விடுமுறை..!!

Published: 30 Aug 2020, 2:55 PM |
Updated: 30 Aug 2020, 3:18 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள், தங்களின் குழந்தை பிறந்தது முதல் ஆறு மாத காலத்திற்குள் ஐந்து நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் (Paternity Leave) பெற்றுக்கொள்ளலாம் எனும் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை ஐக்கிய அரபு அமீரக அரசு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் பெண்களுக்கு மட்டுமே பிரசவத்தின் போது வழங்கப்பட்டு வரும் ஊதியத்துடன் கூடிய “Maternity” எனப்படும் மகப்பேறு விடுப்பை போன்று தற்பொழுது ஆண்களுக்கும் குழந்தை பிறந்தது முதல் ஆறு மாத காலத்திற்குள் “Paternity” எனப்படும் ஊதியத்துடன் கூடிய விடுப்பை அரபு உலகில் முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கூட்டாட்சி சட்டத்தின் புதிய திருத்தங்களுக்கு அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த புதிய சட்டம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த புதிய அறிவிப்பானது, நாட்டின் தலைமையை வலுப்படுத்துவதையும், குடும்ப ஸ்திரத்தன்மை அடைவதையும், இளைய சமுதாயத்தினர் தனியார் துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் பணிபுரியும் அரசு துறை சார்ந்த ஆண் ஊழியர்களுக்கு இதே போன்று மூன்று நாள் “Paterinty” விடுமுறை தற்பொழுது வரையிலும் வழங்கப்பட்டு வருகின்றது. இதே போன்று பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறையானது, தனியார் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 45 நாட்களும் அரசு துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 90 நாட்களும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT