ADVERTISEMENT

அபுதாபி : உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் இருவர் பலி..!!

Published: 31 Aug 2020, 1:14 PM |
Updated: 31 Aug 2020, 1:20 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள உணவகத்தில் இன்று (திங்கள்கிழமை) ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் இரண்டு பேர் பலியாகியுள்ளதாக அபுதாபி காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் விபத்து ஏற்படும் தருணத்தில் அந்த இடத்திற்கு அருகில் இருந்ததாகவும், மற்றொருவர் எரிவாயு வெடிப்பின் போது சிதறிய பொருட்களால் தாக்கப்பட்ட நபர் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அபுதாபியின் ஷேக் ரஷீத் பின் சயீத் தெருவில் (Airport Road) அமைந்துள்ள ஒரு உணவகத்தில், இன்று எரிபொருள் நிரப்பப்பட்டதைத் தொடர்ந்து எரிவாயு கொள்கலன் பொருத்துதல்கள் (gas container fittings) தவறாக வடிவமைக்கப்பட்டதன் காரணமாக வெடிப்பு ஏற்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அபுதாபி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தினால் பலர் சிறிய மற்றும் பெரிய காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் அபுதாபி காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அக்கட்டிடத்தில் வசித்த குடியிருப்பாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு விபத்தினால் அக்கட்டிடத்தின் தரைப்பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்துள்ளது. மேலும், அக்கட்டிடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT