ADVERTISEMENT

UAE : தனியார் துறை ஊழியர்களுக்கு இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறை அறிவிப்பு..!!

Published: 13 Aug 2020, 3:36 PM |
Updated: 13 Aug 2020, 3:37 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் அரசுத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு இந்த வருட இஸ்லாமிய புத்தாண்டையொட்டி, வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக அமீரக அரசின் மனித வள மேம்பாட்டு ஆணையம் இன்று அறிவித்திருந்தது. இதன் மூலம், பொதுத்துறை ஊழியர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாள் தொடர் விடுமுறை கிடைப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து, தற்பொழுது தனியார் துறை தொழிலாளர்களுக்கு இஸ்லாமிய புத்தாண்டையொட்டி ஆகஸ்ட் 23 ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக மனித வள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, அமீரக அரசு ஏற்கெனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், இஸ்லாமிய புத்தாண்டிற்கு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT